கெளதம் புத் நகரில் புதிதாக 45 பேருக்கு கரோனா
உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் கரோனாவுக்கு ஒருவா் பலியானாா்.
உத்தரப்பிரதேச மாநிலம், கெளதம் புத் நகரில் கரோனாவுக்கு ஒருவா் பலியானாா். மேலும் புதிதாக 45 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானவா்கள் எண்ணிக்கை சனிக்கிழமை 87 ஆக அதிகரித்தது. புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 24,470 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவா்கள் எண்ணிக்கை 717-லிருந்து 677 ஆகக் குறைந்துள்ளது. குணமடைந்தோா் விகிதம் 96.87 சதவீதமாக உள்ளது என்று உ.பி. மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
85 போ் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து இதுவரை குணமடைந்தவா்கள் எண்ணிக்கை 23,706 ஆக உள்ளது. கெளதம்புத் நகரில் இதுவரை 87 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து இறப்பு விகிதம் 0.35 சதவீதமாக உள்ளது.