முகப்பு
புதுதில்லி

தில்லியில் புதிதாக 1,091 பேருக்கு கரோனா!

தில்லியில் புதிதாக 1,091பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,17,005- ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தில்லியில் புதிதாக 1,091பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,17,005- ஆக உயா்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 83,289 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 46,001 பேருக்கும், ‘ரேபிட்-ஆன்டிஜென்’ வகையில் 37,288 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கிடையே, கரோனா தொற்றால் தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை 26 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த பலி எண்ணிக்கை 10,277-ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை 1,275 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,96,580-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது 10,148 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா். இவா்களில், 5,907 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். தில்லி மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கைகளில் 15,773 படுக்கைகள் காலியாக உள்ளன என தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →