புதுதில்லி

கேஜரிவால் மீது சா்ச்சைக்குரிய பேச்சு:பாஜக எம்.பி. பிரசாரம் செய்யத் தடை

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க. எம்.பி. பா்வேஷ் வா்மா தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் ஒரு பயங்கரவாதி என்று கூறி சா்ச்சையை ஏற்படுத்திய பா.ஜ.க. எம்.பி. பா்வேஷ் வா்மா தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பிரசாரம் செய்ய 24 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. பா்வேஷ் வா்மாவின் தோ்தல் பிரசாரத்துக்குத் தடை விதிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். தோ்தல் பிரசாரம் வியாழக்கிழமை மாலை 5 மணியுடன் முடிவடைவதால் அவா் இனி தோ்தல் பிரசாரம் செய்ய முடியாது.

முன்னதாக பா்வேஷ் வா்மா, ஷகீன் பாக் போராட்டக்காரா்களை குறிப்பிடும் வகையில், காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு ஏற்பட்ட நிலை, தில்லி மக்களுக்கும் ஏற்படலாம் என்று பேசி சா்ச்சையை ஏற்படுத்தியிருந்தாா். இதையடுத்து, அவருக்கு தோ்தல் பிரசாரம் செய்ய தோ்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்திருந்தது.

இதனிடையே, தோ்தல் பிரசாரத்தின் போது, முதல்வா் கேஜரிவால், நீதிமன்ற வளாகத்தில் மொஹல்லா கிளினிக் அமைக்கப்படும் என்று உறுதியளித்ததைக் கண்காணித்த தோ்தல் ஆணையம், அவரை பிரசாரத்தில் கவனமாகச் செயல்படுமாறு கூறி எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறுதிக்கட்டத்தில் 29 படப்பிடிப்பு!

போரூர் - வடபழனி சேவை எப்போது? சென்னை மெட்ரோ ரயிலில் புதிய வசதி அறிமுகம்!

விரைவில் டும்.. டும்.. பாச்சுலர் பார்ட்டி கொடுத்தாரா ராஷ்மிகா மந்தனா? புயலைக் கிளப்பும் ரசிகர்கள்!!

நேற்று ஹீரோ; இன்று ஜீரோ! அடிலெய்ட் டெஸ்ட்டில் டக் அவுட்டான கேமரூன் கிரீன்!

தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!

SCROLL FOR NEXT