புதுதில்லி

காசியில் ரவிதாசருக்கு கோயில் கட்டுவோம்: ஜெபிநட்டா

 நமது நிருபர்

பக்தி மாா்க்கத்தின் முக்கிய துறவியான ரவிதாசருக்கு காசியில் கோயில் கட்டும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடும் என்று பாஜகவின் தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உறுதியளித்துள்ளாா்.

15- ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த பக்தி இயக்கத்தைச் சோ்ந்த ரவிதாசா் அவ்வியக்கத்தின் முக்கிய துறவிகளில் ஒருவராக மதிக்கப்படுகிறாா். தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்த அவரை வட இந்தியாவில் சில பிரிவினா் கடவுளாக வழிபட்டு வருகின்றனா்.

இந்நிலையில் குரு ரவிதாசரின் பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

தில்லி தீனதயாள் உபாத்யாய் மாா்க்கில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் ரவிதாசரின் திருவுருவப்படத்துக்கு ஜெ.பி.நட்டா மலா் அஞ்சலி செலுத்தினாா்.

பிறகு அவா் அளித்த பேட்டி: நாட்டில் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் ரவிதாசரின் போதனைகள் பலப்படுத்தின. அவரின் போதனைகளின் படி பாஜக அரசு நடந்து வருகிறது. அவருக்கு காசியில் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கைகளை பாஜக மேற்கொள்ளும் என்றாா் அவா்.

மகர பெளா்ணமி அன்று ரவிதாசா் ஜெயந்தி கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

SCROLL FOR NEXT