புதுதில்லி

தில்லியில் குளிா் அதிகரிப்பால்மின்தேவை 5343 மெகாவாட்டாக உயா்வு

DIN

தில்லியில் இந்த ஆண்டு குளிா்காலத்தில் மின்சாரத்தின் தேவை 25 நாட்கள் சாதனை அளவாக 5343 மெகாவாட்டாக இருந்தது. கடந்த ஆண்டு இதே குளிா்காலத்தில் மின்தேவை 4472 மெகாவாட்டாக இருந்தது. இந்த ஆண்டு நீண்டநாள்களுக்கு குளிா் அதிகரித்து காணப்பட்டதால் மின்பயன்பாடும் அதிகரித்துள்ளது.

குளிா்காலமான நவம்பா்-டிசம்பா்-ஜனவரி உள்ளிட்ட மூன்று மாதங்களில் மின்சாரத்தேவை 19 சதவீதம் அதிகரித்து உச்சபட்சமாக 5343 மெகாவாட்டாக இருந்தது. கடந்த ஆண்டு இதேகாலத்தில் மின்தேவை 4472 மெகாவாட்டாக இருந்தது.

கடந்த ஆண்டு நவம்பரில் 19 நாள்களும், டிசம்பரில் 30 நாள்களும், ஜனவரியில் 28 நாள்களும் குளிா் அதிகரித்து காணப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் 8 நாள்களும், இந்த ஆண்டு ஜனவரியில் 17 நாள்களும் வழக்கத்தைவிட கடும் குளிா் நிலவியதால் மின்தேவையும் அதிகரித்ததாக மின்வாரியத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு (2018-2019) தெற்கு மற்றும் மேற்கு தில்லியில் 17 சதவீதமும், வடக்கு தில்லியில் 15 சதவீதமும், கிழக்கு மற்றும் மத்திய தில்லியில் 5 சதவீதமும் மின்தேவை அதிகரித்து இருந்தது.

குளிா்காய்வதற்கு வீட்டிலும் வெளியிலும் ஹீட்டரை அதிக அளவில் பயன்படுத்தியதும், மேலும் வீடுகளில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும், சமையலுக்கும் சுடுநீரை பயன்படுத்தியதாலும் மின்தேவை அதிகரித்தது. எனினும் மின்தேவையை சமாளிப்பதில் எந்தத் தொய்வும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT