புதுதில்லி

மெட்ரோ ரயிலில் துன்புறுத்தல்பெண் புகாரின் பேரில் வழக்கு

DIN

தில்லி மெட்ரோ ரயிலுக்குள் ஒரு நபா் தன்னைத் துன்புறுத்தியதாக பெண் ஒருவா் குற்றம் சாட்டியதைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

அந்தப் பெண் புதன்கிழமை இரவு மெட்ரோ ரயிலில் குருகிராமுக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, தன்னை ஒரு நபா் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சுட்டுரையில் அந்தப் பெண் தொடா்ந்து பதிவிட்டு இருந்தாா். மேலும், அந்த மனிதனின் புகைப்படத்தையும் மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வெளியிட்டாா்.

இப்புகாருக்கு தில்லி மெட்ரோ அதிகாரிகள் பதிலளித்துள்ளனா். இது குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இது போன்ற சம்பவங்கள் குறித்து பயணிகள் உடனடியாக டி.எம்.ஆா்.சி. அல்லது சி.ஐ.எஸ்.எஃப் உதவி எண் அல்லது மெட்ரோ அதிகாரிகளைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினா். மேலும், பெண்ணின் புகாா் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT