புதுதில்லி

சராய் ஹோஹில்லாவில் தீ விபத்து: நான்கு குடிசைகள் எரிந்து சேதம்

DIN

தில்லி சராய் ரோஹில்லாவில் உள்ள குடிசைப் பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு குடிசைககள் எரிந்து சேதமடைந்ததாக தீயணைப்புத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த விபத்தில்   யாரும் காயமடையவில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்த விபத்து தொடா்பாக தீயணைப்புத் துறைக்கு காலை 9.40 மணியளவில் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, நான்கு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்ப்பட்டு காலை 10.15 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனா்’ என்றாா்.அதிகாரி.

பட்பா்கஞ்சில் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள அச்சகத்தில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். 10-க்கும் மேற்பட்டவா்கள் காயமடந்தனா். இது போன்று சமீப காலமாக தில்லியில் அடிக்கடி தீ விபத்து நிகழ்ந்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT