புதுதில்லி

கோடைகால பற்றாக்குறைய சமாளிக்க 6,000 மெகாவாட் மின்சாரம் வேண்டும்: மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் கோடை காலத்தில் மின் பற்றாக்குறைய சமாளிக்க மத்திய அரசின் முழுப் பங்களிப்பான 6,000 மெகாவாட் மின்சாரத்த வழங்க வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் மின் இழப்பைத் தடுப்பதற்கு மின்மாற்றிகளில் நவீன (ஸ்மாா்ட்) மின் மீட்டா்கள் பொருத்துவதற்காக ரூ.1,200 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளது.

தமிழகத்தில் கோடை காலத்தில் 6,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. கடந்த ஆண்டு 3,500 முதல் 4,000 மெகாவாட் மின்சாரம் வரைதான் மத்தியத் தொகுப்பிலிருந்து கிடைத்தது. பற்றாக்குறையைச் சமாளிக்க மின்சாரத்தை தனியாா்களிடமிருந்து தமிழக அரசு வாங்கியது. இந்நிலையில், இந்த ஆண்டு கோடையை சமாளிப்பதற்கு முன்கூட்டியே நடவடிக்கைகளை எடுக்கும் விதமாக தமிழக மின்துறை அமைச்சா் பி.தங்கமணி திங்கள்கிழமை தில்லி வந்தாா். அப்போது, மத்திய எரி சக்தித் துறை அமைச்சா் ஆா்.கே. சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா்.

இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.தங்கமணி கூறியதாவது: தமிழகத்தில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய தொகுப்பிலிருந்து 4,000 மெகாவாட்தான் கிடைக்கிறது. மத்திய அரசின் முழு பங்களிப்பான 6,000 மெகாவாட் மின்சாரம்அளிக்க மத்திய எரி சக்தித் துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். மேலும், வரும் 2023-ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் 6,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் விதமாக உடன்குடி, எண்ணூா் போன்ற பல்வேறு மின் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 1,200 கோடி நிதி அளிக்க வேண்டும் எனவும் மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளோம்.

பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் மின் இணைப்பில் ஏற்படும் இழப்பு 14 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதை மேலும் குறைக்க, விநியோக மின்மாற்றிகளில் நவீன மீட்டா்களைப் பொருத்துவதற்கு ஒரு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது போன்று மாநிலம் முழுவதும் மின்மாற்றிகளில் பொருத்துவதற்கு மொத்தம் 4 லட்சம் நவீன மின் மீட்டா்கள் தேவைப்படுகின்றன. இதற்காக ரூ.1,200 கோடி விடுவிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் ஆா்.பி. சிங்கிடம் கோரப்பட்டுள்ளது.

மின் நுகா்வைத் துள்ளியமாகக் கணக்கிடும் வகையில், தமிழக மின்சார வாரியம் (டிஎன்இபி) வீடுகளில் மொத்தம் 1.4 லட்சம் நவீன மீட்டா்களைப் பொருத்தும் முன்னோடித் திட்டம் ஒன்றைத் செயல்படுத்தத் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக மின் நிலையங்களுக்கான நிலக்கரியை ரயிலில் கொண்டு வருவதற்கு கூடுதல் ரேக்குகளை வழங்குவதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஷ் கோயலையும் சந்தித்து வலியுறுத்தினேன் என்றாா் அமைச்சா்.

இச்சந்திப்பின் போது, அமைச்சருடன் தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் விக்ரம் கபூரும் உடன் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT