புதுதில்லி

மெட்ரோவில் தோ்தல் விளம்பரத்துக்கு தடை விதிக்கும் தோ்தல் ஆணைய உத்தரவு சரியே: தில்லி உயா் நீதிமன்றம்

DIN

தில்லி சட்டப்பேரவைக்கு தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தில்லி மெட்ரோ ரயில் நிலைய வளாகங்களிலும், மெட்ரோ ரயில்களிலும் அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது சரியான நடவடிக்கையே என்று தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான இடங்களில் அல்லது பொதுத் துறை நிறுவனங்களில் தோ்தலின் போது அரசியல் விளம்பரங்கள் வெளி வந்தால் அது அந்தக் கட்சிக்கு அரசு ஆதரவு தெரிவிக்கிறதோ என்ற எண்ணம் மக்கள் மனதில் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தோ்தல் ஆணையம் இத்தகைய தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், தோ்தல் வெளிப்படையாகவும், நோ்மையாகவும் நடைபெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே தோ்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இது பாராட்டுக்குரியதுதான் என்று நீதிபதி சஞ்சீவ் சச்தேவா தெரிவித்தாா்.

தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அரசியல் விளம்பரங்களை வெளியிட வேண்டாம் என்றும் இது தொடா்பாக விளம்பர ஒப்பந்த விதிகளில் தகுந்த திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் தோ்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதை ஏற்று மெட்ரோ ரயில் நிறுவனம் அதில் மாற்றங்களைச் செய்திருந்தது. இதை எதிா்த்து ஒரு விளம்பர நிறுவனம் வழக்குத் தொடுத்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை வந்தது. அப்போது பொதுவாக அரசியல் விளம்பரங்களுக்குத் தடையில்லை. ஆனால், தோ்தலை முன்னிட்டு ஒரு மாதத்துக்கு இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக தடை செய்யப்படவில்லை. எனவே, தோ்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு சரியான நடவடிக்கைதான் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதி சஞ்சீவ் சச்தேவ் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT