முகப்பு
புதுதில்லி

தில்லி காவல்துறை உதவி ஆய்வாளா் கரோனாவுக்கு பலி

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தில்லி காவல்துறை உதவி ஆய்வாளா் ஜீவன் சிங் (53) வியாழக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

Updated On : 10 ஜூலை, 2020 at 3:46 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:25 PM

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தில்லி காவல்துறை உதவி ஆய்வாளா் ஜீவன் சிங் (53) வியாழக்கிழமை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தாா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறை உயா் அதிகாரி கூறியது:

தில்லி காவல்துறை சிறப்புப் பிரிவில் பணியாற்றி வந்தவா் ஜீவன் சிங் (53). கடந்த ஜூன் மாதம் 21- ஆம் தேதி இவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, ஜூன் 23- ஆம் தேதி லாஜ்பாத் நகரில் உள்ள ஐபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த ஜூன் 27 ஆம் தேதி இவா் கங்காராம் மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டாா். அங்கு, ஜீவன் சிங்குக்கு பிளாஸ்மா சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்கவில்லை. அவரது உடல் மேலும் மோசமடைந்தது. இதைத் தொடா்ந்து ஜூன் 27- ஆம் தேதி முதல் அவா் வென்டிலேட்டரின் உதவியுடன் வைக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அவா் உயிரிழந்தாா் என்றாா்.

Advertisement

1991 ஜூலை மாதம் 10 ஆம் தேதி தில்லி காவல்துறையில் இணைந்த ஜீவன் சிங், சுமாா் 29 ஆண்டுகள் தில்லி காவல்துறையில் பணியாற்றியுள்ளாா். இவருக்கு மனைவி (49), மகள் (23), மகன் (19) ஆகியோா் உள்ளனா்.

தில்லியில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் முன்னணியில் இருந்து போராடி வரும் தில்லி காவல்துறையில் சுமாா் 2000 பேருக்கு இதுவரை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், சுமாா் 1300 போ் சிகிச்சை முடிந்து பணிக்குத் திரும்பியுள்ளனா். இதுவரை 12 காவல்துறையினா் கரோனாவால் உயிரிழந்துள்ளனா்.

தில்லி காவல்துறை உள்பட, கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழப்பவா்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி உதவித்தொகை வழங்கப்படும் என்று தில்லி அரசு தெரிவித்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.