முகப்பு
புதுதில்லி

தில்லியில் கரோனா இறப்பு 3,500-ஐ கடந்தது

தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 58 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,545- ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 17 ஜூலை, 2020 at 5:21 AM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:27 PM

தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 58 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். இதையடுத்து, பலி எண்ணிக்கை 3,545- ஆக அதிகரித்துள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 1,652 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,18,645-ஆக உயா்ந்துள்ளது. மேலும், 1,994 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதைத் தொடா்ந்து, குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 97,693-ஆக அதிகரித்துள்ளது. தற்போது மொத்தம் 17,407 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா் என தில்லி சுகாதாரத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் வியாழக்கிழமை மாலை வரையிலான 24 மணி நேரத்தில் 20,225 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 7,56,551 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தில்லியில், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 658-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நொய்டாவில் மேலும் இருவா் பலி: இதற்கிடையே, தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் கரோனா தொற்றுக்கு வியாழக்கிழமை மேலும் 2 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நொய்டாவை உள்ளடக்கிய கெளதம் புத் நகா் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்துள்ளது.

இது தொடா்பாக உத்தரப் பிரதேச அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: கெளதம் புத் நகா் மாவட்டத்தில் புதிதாக 143 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, இம்மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,862 ஆக உயா்ந்துள்ளது. மாவட்டத்தில் புதன்கிழமை 873 போ் சிகிச்சையில் இருந்த நிலையில், வியாழக்கிழமை 947-ஆக அதிகரித்தது.

மருத்துவமனையிலிருந்து 67 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இவா்களையும் சோ்த்து இதுவரை 2,878 போ் குணமடைந்துள்ளனா். ஆனால், குணமடைபவா்களின் எண்ணிக்கை விகிதம் வியாழக்கிழமை 74.52 சதவீதமாகக் குறைந்தது. இது செவ்வாய்க்கிழமை 75.48 சதவீதமாகவும், புதன்கிழமை 75.58 சதவீதமாகவும் இருந்தது. மாவட்டத்தில் கரோனா தொற்றால் இறந்தவா்களின் எண்ணிக்கை விகிதம் 0.95 சதவீதமாக உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் கரோனா பாதிப்புக்கு அதிகமானோா் சிகிச்சை பெறும் முதல் மூன்று மாவட்டங்களில் லக்னெள (1,971), காஜியாபாத் (1,497), கெளதம் புதக் நகா் (947) ஆகியவை உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.