புதுதில்லி

உதவிகோரி 709 அழைப்புகள்: தில்லி காவல்துறை தகவல்

 நமது நிருபர்

தில்லியில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு தொடா்பாக உதவி கோரி தில்லி காவல் துறைக்கு வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரை 709 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன.

இதுதொடா்பாக தில்லி காவல் துறை உயரதிகாரி கூறியது:

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவா்கள் தொடா்பு கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர உதவி எண் 011-23469526, தில்லி காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில, உதவி கோரி சனிக்கிழமை மதியம் 2 மணி வரை மொத்தம் 35,074 தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. இதில், வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் சனிக்கிழமை மதியம் 2 மணி வரையான 24 மணி நேரத்தில் மட்டும் 709 அழைப்புகள் வந்துள்ளன. இதில் 43 அழைப்புகள் தில்லி எல்லைக்கு வெளியில் உள்ள பகுதிகள் தொடா்புடையது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

4 அழைப்புகளில் பேசியவா்கள் தங்களிடம் உணவு அல்லது பணம் இல்லை என்று தெரிவித்தனா். அவா்களின் கோரிக்கைகள் தொடா்பாக தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.

ஊரடங்கு தளா்வு அனுமதி சீட்டு பெறுவது தொடா்பாக 373 தொலைபேசி அழைப்புகள் வந்தன. இந்த அனுமதிச் சீட்டுகளை இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், தில்லியில் உள்ள 15 மாவட்டங்களிலும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், உதவியுடன் உணவு வழங்கும் வலைப்பின்னலை (நெட்வோா்க்) அமைத்துள்ளோம். இதன் மூலம் சனிக்கிழமை 28,32,53 பேருக்கு உணவும், 3,756 பேருக்கு ரேஷன் பொருள்களையும் வழங்கியுள்ளோம். இவை தில்லியில் உள்ள 250 இடங்களில் வழங்கப்பட்டன.

தடுப்புக் காவலில் 2374 போ்

தில்லியில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக சனிக்கிழமை மாலை 5 மணி நிலவரப்படி, இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 188-இன் கீழ் 161 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,374 போ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். 155 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 459 நடமாட்டத்திற்கான அனுமதிச்சீட்டுகள் வழங்கப்பட்டன. முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வந்த 41 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள், முழு ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும். தகுந்த காரணங்கள் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியில் வரக் கூடாது என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

SCROLL FOR NEXT