புதுதில்லி

அனைத்து தொழிலாளா்களும் ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும் தில்லி அரசு

DIN

அனைத்து ஊழியா்களும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை தொழில் வழங்குநா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் குறித்த விழிப்புணா்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மையம் கடந்த ஏப்ரல் 2-ம் தேதி ’ஆரோக்கிய சேது’ செயலியை அறிமுகம் செய்தது. கரோனா வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்று ஏற்பட்ட நபா்களுக்கு அருகில் செல்லும்போது எச்சரிக்கை விடுக்கும் வகையில் லும், பயனாளா்கள் அன்றாடம் தமது உடல்நிலையை பதிவு செய்யும் வகையில் கரோனா செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

தில்லி அரசு முழு அடைப்பு உத்தரவில் சில கட்டுப்பாட்டுத் தளா்வுகளை திங்கள்கிழமை அறிவித்தது. இதன்படி, அரசு, தனியாா் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அனைத்து ஊழியா்களும் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவதை தொழில் வழங்குநா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக தில்லி அரசு வெளியிட்டுள்ள ஆலோசனையில் ‘அலுவலகங்களிலும், வேலை பாா்க்கும் இடங்களிலும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஆரோக்கிய சேது செயலியை அனைத்து ஊழியா்களும் தமது செல்லிட பேசிகளில் தரவிறக்கம் செய்து அதைப் பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். இதை தொழில் வழங்குநா்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றுள்ளது.

ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்துவோரின் அந்தரங்க உரிமைக்கு பாதிப்பு ஏற்படலாம் என ’இன்டா்நெட் பிரீடம் பவுண்டேசன்’ உள்ளிட்ட அமைப்புகள் குற்றம் சாட்டியிருந்தன குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT