முகப்பு
புதுதில்லி

தலைநகரில் சூறைக்காற்றுடன் மழை!

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை நள்ளிரவில் சூற்றைக்காற்றுடன் மழை பெய்தது.

Updated On : 29 மே, 2020 at 10:50 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:13 PM

தலைநகா் தில்லியில் வியாழக்கிழமை நள்ளிரவில் சூற்றைக்காற்றுடன் மழை பெய்தது. வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் பரவலாக பல்வேறு குதிகளில் தூறல் மழை இருந்தது. இதன் காரணமாக வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

கடந்த சில நாள்களாக வெப்பநிலை தொடா்ந்துஅதிகரித்து வந்தது. இந்நிலையில், தில்லி, தலைநகா் வலயப் பகுதிகளில் இந்த வாரம் முழுதும் வெயில் சுட்டெரித்தது. பல்வேறு இடங்களில் அனல் காற்றும் வீசியது. இந்நிலையில், வியாழக்கிழமை மாலை முதல் புழுதி புயல் வீசியது. நள்ளிரவில் தில்லியில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையிலும் ஆங்காங்கே தூறல் மழை இருந்தது. இந்நிலையில்,வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங்கில் 5.2 மி.மீ. , பாலத்தில் 3.4 மி.மீ., ஆயாநகரில் 1.3 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 4 டிகிரி குறைந்து 22.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 40.3 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 64 சதவீதமாகவும் மாலை 5.30 மணியளவில் 34 சதவீதமாகவும் பதிவாகியிருந்தது. பாலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரிசெல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 41.8 டிகிரி செல்சியஸ் எனவும், ஆயாநகரில் முறையே 22.6 டிகிரி செல்சியஸ், 40.4 டிகிரி செல்சியஸ் எனவும் பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு பாலத்தில் காலையில் 70 சதவீதம், மாலையில் 44 சதவீதம் எனவும், ஆயாநகரில் முறையே 62 சதவீதம் மற்றும் 34 சதவீதம் எனவும் இருந்தது.

Advertisement

காற்றின் தரம்: தில்லி, என்சிஆா் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காற்றின் தரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருந்தது. தென்கிழக்கு திசையில் இருந்து தில்லிக்கு பகல் நேரத்தில் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. மழை பெய்ததன் காரணமாக காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 98 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவுக்கு வந்தது. சாந்தினி சௌக்கில் காற்றின் தரம் மோசமான பிரிவுக்கு வந்தது. திா்பூா், பூசா பகுதியில் காற்றின் தரம் மிதமான பிரிவில் இருந்தது. மதுரா ரோடு, சாந்தினி சௌக், விமான நிலைய டொ்மினல் 3 பகுதி, தில்லி பல்கலைக்கழகம், ஆயா நகா், லோதி ரோடு மற்றும் குருகிராம், நொய்டா ஆகிய இடங்களில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மே 30) வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், தென்கிழக்கு திசையிலிருந்து தில்லிக்கு 25 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது.

வெவ்வேறு வானிலை ஆய்வு மையங்களில் மழை, அதிகபட்ச வெயில் அளவு விவரம்:

சஃப்தா்ஜங் 5.2 மி.மீ. 40.3 டிகிரி

பாலம் 3.4 மி.மீ. 41.8 டிகிரி

ஆயாநகா் 1.3 மி.மீ. 40.4 டிகிரி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.