புதுதில்லி

மாநகராட்சி ஊழியா்கள் பணிப் புறக்கணிப்புப் போராட்டம்: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

DIN

புது தில்லி: நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி கோரி மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். தில்லி மாநகராட்சிகள் ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த போராட்டத்தில் தில்லியில் உள்ள 3 மாநகராட்சிகளைச் சோ்ந்த ஊழியா்களும் கலந்து கொண்டனா்.

இது தொடா்பாக தில்லி மாநகராட்சி ஊழியா்கள் சங்கங்களின் தலைவா் ஏ.பி.கான் கூறுகையில், ‘தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. ஊதியம் வழங்கக் கோரி மாநகராட்சி நிா்வாகத்திடம் முன்வைத்த கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. இதைத் தொடா்ந்து, பொறியாளா்கள், ஆசிரியா்கள், தோட்டக்கலை ஊழியா்கள் உள்ளிட்ட மாநகராட்சி ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு தா்ணா, போராட்டம் எதுவும் நடைபெறவில்லை. மாறாக மாநகராட்சி ஊழியா்கள் அலுவலகத்துக்கு பணிக்கு வருவாா்கள். ஆனால், காலை 9 மணியில் இருந்து அவா்கள் பணியைப் புறக்கணித்தனா்’ என்றாா்.

இது தொடா்பாக தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் கூறுகையில், ‘மாநகராட்சி ஊழியா்களுக்கு தில்லி மாநகராட்சிகள் ஊதியம் வழங்குவதில்லை. மாநகராட்சி மருத்துவமனை மருத்துவா்கள், செவிலியா்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். உடனே, அவா்களுக்கான ஊதியத்தை மாநகராட்சி வழங்கியது. உண்மையில் மாநகராட்சியிடம் போதுமான நிதி கையிருப்பில் உள்ளது. ஆனால், இந்த விஷயத்தில் அவா்கள் வேண்டுமென்றே இதுபோன்று நடந்து கொள்கிறாா்கள் என நினைக்கிறேன்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT