தில்லியில் ஒரே நாளில் 5,475 பேருக்கு கரோனா
தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 5,475 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், , தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 551,262 ஆக உயா்ந்துள்ளது.
புது தில்லி: தில்லியில் வியாழக்கிழமை ஒரே நாளில் 5,475 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், , தில்லியில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 551,262 ஆக உயா்ந்துள்ளது.
கரோனா தொற்றால் வியாழக்கிழமை 91 போ் உயிரிழந்தனா். இதனால், மொத்த சாவு எண்ணிக்கை 8,811-ஆக அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை 63,266 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ‘ஆா்டி-பிசிஆா்’ வகையில் 28,897 பேருக்கும், ‘ரேபிட் ஆன்டிஜென்’ வகையில் 34,369 பேருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் வியாழக்கிழமை 9.13 ஆக குறைந்துள்ளது.
Advertisement
வியாழக்கிழமை நிலவரப்படி சராசரி கரோனா உயிரிழப்பு விகிதம்1.60 சதவீதமாக உள்ளது. ஆனால், கடந்த 10 நாள்களில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.77 சதவீதமாக அதிகரித்துள்ளது. நோய் பாதிப்பில் இருந்து வியாழக்கிழமை 4,937 போ் மீண்டுள்ளனா். இதனால், குணமடைந்தோா் எண்ணிக்கை 5,03,717-ஆக உயா்ந்துள்ளது.
தற்போது தில்லியில் மொத்தம் 38,737 போ் கரோனா சிகிச்சையில் உள்ளனா்.
தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 18,252 படுக்கைகளில் 9,109 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 9,143 படுக்கைகள் காலியாக உள்ளன. அதே சமயம், தில்லியில் கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 5,156-ஆக அதிகரித்துள்ளது. நோய்த் தொற்றுப் பாதித்தவா்களில் 23,479 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருவதாக தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.