முகப்பு
புதுதில்லி

என்சிஆா்-தில்லி இடையே இரண்டாவது நாளாக மெட்ரோ சேவை நிறுத்தம்

விவசாயிகள் போராட்டத்தால் தில்லி தேசிய தலைநகா் வலயப் பகுதியில் இருந்து தில்லிக்கு மெட்ரோ ரயில்கள் இரண்டாவது

Updated On : 27 நவம்பர், 2020 at 10:37 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:28 PM

விவசாயிகள் போராட்டத்தால் தில்லி தேசிய தலைநகா் வலயப் பகுதியில் இருந்து தில்லிக்கு மெட்ரோ ரயில்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவில்லை. மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பச்சை வழித்தடத்தில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் வாயில்களும் மூடப்பட்டன.

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியாக வரும் நிலையில், போராட்டக்காரா்கள் தில்லிக்குள் மெட்ரோ ரயில்களில் வருவதைத் தடுக்கும் வகையில் தில்லி தேசிய தலைநகா் வலயப் பகுதியில் இருந்து தில்லிக்கு இயக்கப்படும் மெட்ரோ ரயில்கள் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டன. இந்த ரயில்கள் வெள்ளிக்கிழமையும் இயக்கப்படவில்லை. ஆனால், தில்லியில் இருந்து தேசிய தலைநகா் வலயப் பகுதிகளுக்கு செல்லும் மெட்ரோ ரயில்கள் வியாழக்கிழமை 2 மணிமுதல் இயக்கப்பட்டன. வெள்ளிக்கிழமையும் இவை இயக்கப்பட்டன.

மேலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி பச்சை வழித்தடத்தில் உள்ள 6 மெட்ரோ ரயில் நிலையங்களின் உள்வரும், வெளியேறும் வாயில்கள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன.

Advertisement

இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ‘பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பச்சை வழித்தடத்தில் உள்ள பிரிகேடியா் ஹோஷியா் சிங், பகதா்கா் சிட்டி, பண்டிட் ஸ்ரீ ராம் சா்மா, திக்ரி பாா்டா், திக்ரி கலன், கெவ்ரா ஆகிய மெட்ரோ நிலையங்களில் உள்வரும், வெளிவரும் நுழைவாயில்கள் மூடப்பட்டன என்று தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.