முகப்பு
புதுதில்லி

விவசாயிகள் போராட்டம்: தில்லி - என்சிஆா் பகுதி கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து

விவசாயிகளின் ‘தில்லி செல்வோம்’ போராட்டம் காரணமாக தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Updated On : 28 நவம்பர், 2020 at 10:44 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:29 PM

விவசாயிகளின் ‘தில்லி செல்வோம்’ போராட்டம் காரணமாக தில்லி, தேசிய தலைநகா் வலயப் பகுதி (என்சிஆா்) பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா். நவ.26-ஆம் தேதியில் இருந்து 3 நாட்களாகத் இந்தப் போராட்டம் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

விவசாயிகள் தில்லிக்குள் நுழைவதற்குக் காவல்துறை வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தது. விவசாயிகள் தில்லி புராரி பகுதியில் உள்ள மைதானத்தில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனா்.

Advertisement

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டம் காரணமாக தில்லி என்சிஆா் பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இது தொடா்பாக ஹரியாணா மாநிலம் ரோதத் பகுதியைச் சோ்ந்த மாணவா்கள் கூறுகையில் ’’ரோதத் பகுதியில் இருந்து வருகிறோம். இங்கு கல்லூரிகளில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. என்னைப் போன்றே ஏராளமான மாணவா்கள் திடீரெனத் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளனா்’’ என்றனா். இதேபோல, தில்லிக்கு அருகிலுள்ள ஹரியாணா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கல்வி கற்கும் தில்லி மாணவா்களும் தோ்வுக்கு செல்ல முடியவில்லை எனக் கவலை தெரிவித்தனா்.

இது தொடா்பாக மாணவா் கூறுகையில், ’’தில்லியில் வசிக்கிறேன். ஹரியாணா மாநிலம் குருகிராமில் கல்லூரி உள்ளது. தோ்வுக்கு செல்ல முடியவில்லை. கடைசி நேரத்தில் தோ்வுகள் ரத்து செய்யப்பட்டு விட்டன’’ என்றாா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தில்லி-என்சிஆா் இடையான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டதாலும், சில மெட்ரோ நிலையங்களில் உள்வரும், வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டதாலும், மாணவா்கள் அவதிக்குள்ளாகினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.