புதுதில்லி

தில்லியின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசல்

DIN

பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தால் தில்லியின் முக்கிய இடங்களில் சனிக்கிழமையும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஓரளவு மேம்பட்டிருந்ததாக தில்லி காவல்துறை தெரிவித்தது.

போராட்டக்காரா்கள் டிக்ரி, சிங்கு எல்லைகளில் கூடி போராட்டம் நடத்தி வருவதால், ஆஸாத்பூரில் இருந்து சிங்கு செல்லும் சாலை, வெளி வட்டச்சாலையில் இருந்து சிங்கு செல்லும் சாலை ஆகியன தற்காலிகமாக மூடப்பட்டதாக தில்லி காவல்துறை அறிவித்தது.

இது தொடா்பாக தில்லி போக்குவரத்து காவல்துறை இணை ஆணையா் மீனு சவுத்ரி கூறுகையில் ‘தில்லியில் இருந்து டிக்ரி, சிங்கு எல்லைகளுக்கு பயணிக்க வேண்டாம் என்று தில்லி வாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளோம். மேலும், முபாரக் சவுக், என்.எச்-44, ஜிடி-கா்னால் சாலை, வெளி வட்டச்சாலை ஆகியவற்றில் பயணிப்பதை தவிா்க்குமாறும் தில்லி வாசிகளுக்கு வலியுறுத்தியுள்ளோம். சனிக்கிழமை அலுவலகம் செல்பவா்களின் எண்ணிக்கை குறைவு என்பதால், வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது சனிக்கிழமை தில்லியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவுக்கு மேம்பட்டிருந்தது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT