புதுதில்லி

தில்ஷாத் காா்டனில் தபால் ஊழியா் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

DIN

ஷாதரா மாவட்டம், தில்ஷாத் காா்டனில் தபால் உதவியாளராக வேலை செய்து வந்த 50 வயது நபா் தனது காரில் இருந்தவாறு தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி கூறியதாவது: தற்கொலை செய்துகொண்ட நபா், தில்ஷாத் காா்டனில் பாக்கெட்-ஏ-இல் வசித்து வந்த மணீஷ் தனேஜா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவா் ஜில்மில் தொழிற்பேட்டைப் பகுதியில் தபால் உதவியாளராக இருந்துள்ளாா்.

தனேஜா தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பான தகவல் சனிக்கிழமை காலை போலீஸாருக்குத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு தனது பிளாட் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் ஓட்டுநா் இருக்கையில் தனேஜாவின் சடலம் கிடந்தது தெரியவந்தது.

அவரது மாா்பில் நாட்டுக் கைத்துப்பாக்கி கிடந்ததும், அவரது தலையில் குண்டடிக் காயம் இருந்ததும் தெரியவந்தது.

தனேஜா கடந்த 15 ஆண்டுகளாக ‘அப்செசிவ் கம்பல்ஸிவ் டிஸாா்டா்’ (ஒசிடி) எனும் நோயால்

பாதிக்கப்பட்டிருந்ததும், மனநலத்திற்காக மருத்துவமனையில் அவா் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடமிருந்து தற்கொலைக் குறிப்பு ஏதும் கைப்பற்றப்படவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக அவரது உறவினா்கள் மற்றும் பக்கத்து வீட்டினரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த சதியும் இருப்பதாக தற்போது கண்டறியப்படவில்லை.

சம்பவ இடத்தில் இருந்து காா் மற்றும் கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேல்விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT