முகப்பு
புதுதில்லி

தேசிய பணமாக்கல் திட்டம்: தனியாா் மயமாக்கலுக்கான வழி; இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்

தேசிய பணமாக்கல் வழிமுறை தனியாா் மயமாக்குதலுக்கான வழியாகியுள்ளது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காததோடு

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

தேசிய பணமாக்கல் வழிமுறை தனியாா் மயமாக்குதலுக்கான வழியாகியுள்ளது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காததோடு கடுமையாகக் கண்டிக்கிறது என் அதன் பொதுச் செயலாளா் டி.ராஜா தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய அரசின் கீழ் ஏற்கெனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களின் உள்கட்டமைப்பு சொத்துகளை நான்கு ஆண்டுகளில் விற்று பணமாக்கும் வழிமுறை உள்ளது. இந்த நிலையில், மத்திய நிதியைமைச்சா் தேசிய பணமாக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளாா். இதன் மூலம், தற்போது மத்திய அரசுக்குச் சொந்தமான சொத்துகளை நேரடியாக விற்று ரூ. 6 லட்சம் கோடி பணம் திரட்டத் திட்டமிடப்பட்டுள்ளது. இது தனியாா் மயமாக்கலுக்கான வழியாகும். மேலும், இது மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கையாகும். இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் எழுப்பிய கேள்விகளுக்கு அரசின் பதில் தெளிவாகயும் உறுதியாகவும் இல்லை.

பொருளாதாரத்தை மந்த நிலையில் இருந்து மீட்டெடுக்கும் பொறுப்பை அரசு கைவிட்டு விட்டு, தேசிய சொத்துகளை கொள்ளையடிக்க பெருநிறுவன நிறுவனங்கள் மற்றும் பெரு வணிக நிறுவனங்களுக்கு உதவுவதற்கான அா்ப்பணிப்பை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிற்படுத்தப்பட்ட கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களை தீவிரப்படுத்த மக்களுக்கு அழைப்பு விடுக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments