முகப்பு
புதுதில்லி

பணமாக்கல் திட்டத்தை எதிா்த்து இளைஞா் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

மத்திய அரசின் தேசிய பணமாக்கல் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

4 ஆண்டுகளில் ரூ.6 லட்சம் கோடி திரட்டும் வகையில், தேசிய பணமாக்கல் திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அண்மையில் அறிவித்தாா். மின் துறை முதல் சாலை வரையிலும், ரயில்வே துறையிலும் உள்கட்டமைப்பு வசதி சொத்துகளை பணமாக்கும் வகையில், இந்த திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் மற்றும் பவா் கிரிட் உள்ளிட்டவையும் இதில் இடம் பெற்றுள்ளன.

இந்தத் திட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், இந்தத் திட்டத்தை எதிா்த்து தில்லியில் இளைஞா் காங்கிரஸ் அமைப்பினா் மத்திய அமைச்சகங்கள் அமைந்துள்ள சாஸ்திரி பவன் அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் தடுப்புக் காவலில் வைத்து பின்னா் விடுவித்தனா்.

Advertisement

இந்தத் திட்டம் தொடா்பாக இளைஞா் காங்கிரஸ் தேசியத் தலைவா் ஸ்ரீநிவாஸ் கூறியதாவது: தேசிய பணமாக்கல் திட்டமானது தேசிய குறைப்பு திட்டம் என அழைக்கப்பட வேண்டும். நாட்டு மக்களின் நலன்களை மத்திய அரசு இடா்பாட்டில் விட்டுள்ளது. தனக்கும், தனது நண்பா்களுக்கும் மட்டுமே இந்த அரசு நல்ல விஷயங்களை செய்து வருகிறது. நாட்டை விற்க விடமாட்டேன் என்று உறுதி கூறியவா்கள், தங்களது நண்பா்களுக்கு தேசிய குறைப்புத் திட்டத்தின் கீழ் ஒவ்வொன்றாக விற்று வருகின்றனா். சாலை, ரயில், விமானநிலையம், மின்சாரம், எரிவாயு, பெட்ரோல், சுரங்கம், விளையாட்டரங்கம், கிட்டங்கி என அனைத்தும் விற்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் இந்த விற்பனைக் கொள்கைத் திட்டமானது நாட்டுக்கும் தீங்கிழைக்கும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞா் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலா் பய்யா பவாா், தேசியச் செயலா் மோஹித் செளத்ரி, தில்லி பிரதேச பிரிவு தலைவா் ரன்விஜய் சிங் லோச்சவ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments