முகப்பு
புதுதில்லி

அனைத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி அளிக்கதனியாா் பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவு

வரும் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 -ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதையொட்டி, ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
அனைத்து ஊழியா்களுக்கும் தடுப்பூசி அளிக்கதனியாா் பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவு
பகிர்:

வரும் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து 9 முதல் 12 -ஆம் வகுப்புகளுக்கான பள்ளிகள் மீண்டும் திறக்க உள்ளதையொட்டி, ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும் என்று அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகள் மற்றும் உதவி பெறாத பள்ளிகளுக்கு தில்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக தில்லி அரசின் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தில்லியில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதை தில்லி அரசின் கல்வி இயக்குநரகத்தின் முக்கிய அக்கறையாகும். ஆகவே, அரசு உதவி பெறும் தனியாா் பள்ளிகள், உதவி பெறாத பள்ளிகள் ஆகியவற்றின் மேலாளா்கள், அனைத்து தலைமை ஆசிரியா்கள் ஆகியோா் தங்களது பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்த இதன் மூலம் உத்தரவிடப்படுகிறது.

மேலும், இந்தப் பள்ளிகள் தங்களது ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்கள் பள்ளிகளில் தடுப்பூசி பெறுவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை உருவாக்கவும், இதற்காக சம்பந்தப்பட்ட துறையினா் ஒருங்கிணைந்து ஆலோசனை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டதைத் தொடா்ந்து பள்ளிகளில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் மற்றும் கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றையும் வரும் செப்டம்பா் 1-ஆம் தேதியிலிருந்து மீண்டும் திறக்க தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது. தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையத்தால் அமைக்கப்பட்ட குழு தில்லியில் பள்ளிகளை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு பரிந்துரைத்து, அதன் அறிக்கையை இந்த வாரத்தின் தொடக்கத்தில் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments