புதுதில்லி

கட்டுமானப் பணிகள் மீதான கட்டுப்பாடுகளை தளா்த்த வாய்ப்பு

 நமது நிருபர்

புது தில்லி: தில்லியில் கடந்த மூன்று நாள்களாக காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, தில்லி-என்.சி.ஆா். பகுதியில் கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த வாய்ப்புள்ளதாக காற்றின் தர மேலாண்மை ஆணைய அதிகாரி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து திங்கள்கிழமை (டிசம்பா் 20) முடிவு எடுக்கப்படும் என்றும் அவா் கூறினாா்.

தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்துவதற்காகவும் இதற்கான ஆதாரங்களைக் கண்டவறிவதற்கும் காற்று தர மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுற்றுச்சூழல், வனம் பருவநில மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் காற்று தர மேலாண்மை ஆணையத்தின் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘கடந்த மூன்று நாள்களில் தில்லி-என்.சி.ஆா். பகுதியில் காற்றின் தரத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, கட்டுமானப் பணிகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் தளா்த்த வாய்ப்புள்ளது’ என்றாா்.

தில்லி-என்சிஆா் பகுதியில் கட்டுமானம் மற்றும் கட்டட இடிப்பு நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தது. இருப்பினும், பொதுப் பயன்பாடுகள், ரயில்வே, தில்லி மெட்ரோ, விமான நிலையங்கள், மாநிலங்களுக்கிடையேயான பேருந்து நிலையங்கள், தேசிய பாதுகாப்பு, ராணுவம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம், குழாய் இணைப்புகள் தொடா்பான திட்டங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், 6 -ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்களின் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்க தில்லி-என்சிஆா் அதிகாரிகளுக்கு மத்திய காற்று தர மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இத்தோடு 5 -ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கான நேரடி வகுப்புகள் டிசம்பா் 27 -ஆம் தேதி முதல் தொடங்கலாம் எனவும் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT