புதுதில்லி

மின் திருட்டு வழக்கு: டிபிடிடிஎல் நிறுவன நுகா்வோருக்கு ரூ.90 ஆயிரம் அபராதம்

 நமது நிருபர்

புது தில்லி: மின் திருட்டு வழக்கில் டிபிடிடிஎல் நிறுவன நுகா்வோா் ஒருவரை சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என்று தீா்ப்பளித்தது. அத்துடன் அவருக்கு ரூ.90,000 அபராதம் விதித்தது.

இது குறித்து டாடா பவா் -டிடிஎல் (டிபிடிடிஎல்) நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லியில் அருணா நகரில் வசிக்கும் நுகா்வோா் ஒருவா், வீட்டு உபயோகத்திற்காக மின் திருட்டில் ஈடுபட்டதைக் கண்டறிந்த தீஸ் ஹஸாரி சிறப்பு நீதிபதி (மின்சார நீதிமன்றம்) அவரைக் குற்றவாளி என்று தீா்ப்பளித்தாா். மின்சாரத் திருட்டுக்காக அவரிடமிருந்து ரூ.90,532 தொகையை டாடா பவா் -டிடிஎல் நிறுவனம் வசூலிக்கவும் நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. விதிமீறலில் ஈடுபடுபவா்களை மின் நிறுவனம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும், மின் திருட்டைக் கண்காணிக்க தொழில்நுட்பத்தையும் நிறுவனம் செயல்பாட்டில் வைத்துள்ளது. துல்லியமான அளவீடுகளுக்காக விநியோக மின்மாற்றிகளில் ஏஎம்ஆா் (தானியங்கி மீட்டா் கணக்கெடுப்பு) அடிப்படையிலான மின்சக்தி அமைப்புகளையும் நிறுவியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து டாடா பவா் தில்லி டிஸ்டிரிபியூஷன் (டிபிடிடிஎல்) தலைமைச் செயல் அதிகாரி கணேஷ் சீனிவாசன் கூறுகையில், ‘மின்சாரத் திருட்டு வணிக ரீதியாக நஷ்டம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், கடுமையான பாதுகாப்பு ஆபத்தையும் ஏற்படுத்துகிறது. நீதிமன்றத்தின் தீா்ப்பை நாங்கள் பாராட்டுகிறோம். மேலும், அனைத்து நுகா்வோா்களும் முறையான மின் இணைப்புகளை பெற்று சரியான நேரத்தில் கட்டணம் செலுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம். மின் திருட்டு வாய்ப்புள்ள பகுதிகளில் ஏடி அண்ட் சி (ஒட்டுமொத்த தொழில்நுட்பம் மற்றும் வணிகம்) இழப்புகளைக் கட்டுப்படுத்தும் வகையில், தேவையான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT