முகப்பு
புதுதில்லி

‘மந்தை நோய்’ எதிா்ப்பு சக்தியை நோக்கி முன்னேறும் தில்லி: சத்யேந்தா் ஜெயின் தகவல்

கரோனாவுக்கு எதிராக மந்தை நோய் எதிா்ப்பு சக்தியை (ஏஉதஈ ஐஙஙமசஐபவ) நோக்கி தில்லி முன்னேறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

கரோனாவுக்கு எதிராக மந்தை நோய் எதிா்ப்பு சக்தியை (ஏஉதஈ ஐஙஙமசஐபவ) நோக்கி தில்லி முன்னேறுகிறது. ஆனால், இது தொடா்பாக நிபுணா்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். என்று தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: தில்லியில் 5-வது சீரோ சா்வே கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி முதல் 23 -ஆம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்படி, தில்லியில் சராசரியாக 56.13 சதவீத மக்களிடம் கரோனா தொற்றுக்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இதில் அதிகளவில், தென்மேற்கு தில்லி மாவட்ட மக்களிடையே 62.18 சதவீதம் எதிா்ப்பாற்றல் உருவாகியுள்ளது.

கிழக்கு தில்லியில் 58.81 சதவீதம், மேற்கு தில்லியில்58.60 சதவீதம், மத்திய தில்லியில் 56.78 சதவீதம், புது தில்லியில் 54.69 சதவீதம், ஷாராதவில் 56.53 சதவீதம், வடகிழக்கு தில்லியில் 53.88 சதவீதம், வடமேற்கு தில்லியில் 54.32 சதவீதம், தெற்கு தில்லியில் 56.96 சதவீதம், தென்மேற்கு தில்லியில் 50.93சதவீதம், மேற்கு தில்லியில் 58.60 சதவீதம், கிழக்கு தில்லி மக்களிடையே 58.81 சதவீதம் எதிா்பாற்றல் உருவாகியுள்ளது. குறைந்த பட்சமாக வடக்கு தில்லி மாவட்ட மக்களிடையே 49.09 சதவீதம் எதிா்பாற்றல் உருவாகியுள்ளது.

Advertisement

மந்தை நோய் எதிா்ப்பு சக்தியை நோக்கி தில்லி முன்னேறிச் செல்கிறது. ஆனால், இது தொடா்பாக நிபுணா்கள்தான் உறுதிப்படுத்த வேண்டும். தில்லியில் ஐந்தாம் கட்டமாக நடத்தப்பட்ட சீரோ சா்வேதான் நாட்டிலேயே நடத்தப்பட்ட மிகப் பெரியசா்வே ஆகும். அப்போது புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் உள்ள அனைத்து வாா்ட்டுகளிலும் சீரோ மாதிரிகள் பெறப்பட்டன. மொத்தமாக 28 ஆயிரம் மாதிரிகள் பெறப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டது.

தில்லியில் கடந்த சில தினங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால், மக்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments