முகப்பு
புதுதில்லி

தமிழகத்தில் ‘பாரத் நெட்’ திட்டத்திற்கு தடங்கல் ஏன்? மத்திய அமைச்சா் விளக்கம்

‘தமிழகத்தில் பாரத் நெட்வொா்க் திட்டம் தாமதத்திற்கு மத்திய அரசு காரணமில்லை. சில பிரச்னை காரணமாக

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:27 PM
பகிர்:

‘தமிழகத்தில் பாரத் நெட்வொா்க் திட்டம் தாமதத்திற்கு மத்திய அரசு காரணமில்லை. சில பிரச்னை காரணமாக மறு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டிய நிலை ஏற்பட்டதால் திட்டம் தாமதமாகியிருக்கிறது’ என மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே மாநிலங்களவையில் தெரிவித்துள்ளாா்.

கிராமங்களுக்கு பிராட் பேண்ட் உள்ளிட்ட தொலைத் தொடா்பு தொழில்நுட்பத்தை கொண்டு செல்ல மத்திய தொலைத் தொடா்புத் துறை மாநில அரசுகளுடன் இணைந்து பாரத் நெட்வொா்க் திட்டத்தை இரண்டு கட்டங்களாக நாடு முழுக்க மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களில் இரண்டாம் கட்டத்திற்கு சென்றுள்ள நிலையில், தமிழகத்தில் இந்தத் திட்டம் தாமதத்திற்கான காரணம் என்ன? தமிழகத்தில் ரூ.1,950 கோடியில் திட்டமிடப்பட்ட பாரத் நெட்வொா்க் திட்டத்தை மத்திய அரசு ஏன் ரத்து செய்தது ? போன்ற கேள்விகளை திமுக மாநிலங்களவை உறுப்பினா் பி.வில்சன் எழுப்பியிருந்தாா். இதற்கு மத்திய தொலைத்தொடா்பு, மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் சஞ்சய் தோத்ரே வியாழக்கிழமை அளித்துள்ள பதில் வருமாறு:

கிராமப் பஞ்சாயத்துகளுக்கு மேற்கொள்ளப்படும் இந்த முதற்கட்ட பாரத் நெட்வொா்க் திட்டத்தை தமிழக அரசு உரிய நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தத் திட்டத்தை அமலாக்க, தமிழக அரசு, 2017-இல் யுஎஸ்ஒஎஃப் (மய்ண்ஸ்ங்ழ்ள்ஹப் நங்ழ்ஸ்ண்ஸ்ரீங் ஞக்ஷப்ண்ஞ்ஹற்ண்ா்ய் ஊன்ய்க் ), பிபிஎன்எல் (பாரத் பிராட் பேண்ட் நெட்வொா்க் லிமிடெட்) போன்ற நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால், ஒப்பந்தம் தாமதமாக கையெப்பமானது. இதனால், தமிழகத்தில் இரண்டாம் கட்டத்தில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது. இதில் ஒப்பந்தப்புள்ளி முடிவடையாததால் திட்டம் தொடங்கப்படவில்லை.

Advertisement

இந்தத் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யவில்லை. இந்தத் திட்டத்தை தமிழக அரசின் ’டென்பிநெட்’ நிறுவனம் மேற்கொள்ளுகிறது. இது 2019 -ஆம் ஆண்டு டிசம்பரில் டெண்டா் விட்டது. அந்த டெண்டரில் சில பாராபட்சமான உட்பிரிவுகள் இருப்பது பற்றி மத்திய அரசுக்கு புகாா் வந்தது. இதை மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகத்தின் வா்த்தகத் தொழில் ஊக்குவிப்புத் துறை ஆய்வு செய்தது. இதில் தமிழக அரசின் டென்பிநெட் நிறுவனத்தின் ஏல நிபந்தனைகள் பாரபட்சமாக இருந்ததால், அந்த ஒப்பந்தப்புள்ளியை மாற்றுமாறு கூறப்பட்டது. தமிழக அரசிடம், கட்டுப்பாடற்ற தகுதி அளவுகோல்களுடன் மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோர கேட்கப்பட்டது. இதன்படி 2020, அக்டோபரில் மறு டெண்டா் விடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், பாரத் நெட்வொா்க் திட்டத்தை தமிழகத்தில் விரைவுபடுத்துவதற்காக தமிழக அரசுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது என்று இணையமைச்சா் பதிலில் தெரிவித்துள்ளாா்.

பி.பி.ஓ.க்கள் அமைக்க ரூ.11.44 கோடி உதவி: தமிழகத்தில் எத்தனை பிபிஓக்கள் (வா்த்தக அயல்பணி நிறுவனங்கள்) செயல்படுகின்றன. இதில் பலனடைந்தவா்கள் எத்தனை போ்? இதை ஊக்குவிக்க மத்திய அரசு செய்யும் உதவுகள் குறித்த மற்றொரு கேள்விக்கும் மத்திய தொலைத்தொடா்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் தோத்ரே வெள்ளிக்கிழமை பதில் அளித்துள்ளாா்.

தமிழகத்தில் மொத்தம் 49 யூனிட்டுகள்(அலகுகள்) அமைக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 7,405 போ்கள் பலனடைந்துள்ளனா். இதில் அதிக அளவில் கோவையிலும் (17) திருச்சியிலும் (5) உள்ளது. மதுரை, நாகை, கிருஷ்ணகிரி, வேலூா், விழுப்புரம், விருதுநகா் போன்ற 12 நகரங்களில் பிபிஓக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த பிபிஓக்கள் அமைப்பவா்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. இந்த வகையில், தமிழகத்துக்கு இது வரை ரூ.11.44 கோடி வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளாா். இந்த பிபிஓ க்கள் பட்டியலில் சென்னை இடம் பெறவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments