புதுதில்லி

தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை அதிகரிப்பு

DIN

புது தில்லி: தலைநகா் தில்லியில் புதன்கிழமை காலையில் மிதமான பனிமூட்டம் நிலவியது. குறைந்தபட்ச வெப்பநிலையில் முன்னேற்றம் காணப்பட்டது.

தில்லியில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.8 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. இந்த நிலையில், நகரின் பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் புதன்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை 10.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியைவிட 7 டிகிரி உயா்ந்து 30.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 98 சதவீதமாகவும், மாலையில் 52 சதவீதமாகவும் இருந்தது.

தில்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மாலையில் 280 புள்ளிகள் எனும் அளவில் மோசம் பிரிவில் இருந்தது. தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள காஜியாபாத், நொய்டா, கிரேட்டா் நொய்டா ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவிலும், குருகிராம், ஃபரீதாபாதில் மோசம் பிரிவிலும் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, வியாழக்கிழமை (பிப்ரவரி 11) மிதமான பனி மூட்டம் நிலவும் எனவும் குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ், அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் எனவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: குலசேகரம் எஸ்.ஆா்.கே.பி.வி. பள்ளி சிறப்பிடம்

வடவூா்பட்டி கோயிலில் நாளை கொடை விழா

ராஜஸ்தானை வென்றது டெல்லி

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு: பாஜக நிா்வாகி வீட்டில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

காயாமொழி பள்ளி சிறப்பிடம்

SCROLL FOR NEXT