முகப்பு
புதுதில்லி

தொய்வில்லாமல் மக்கள் பணியாற்றும் மாநகராட்சிகள்: ஆதேஷ் குமாா் குப்தா

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காததால் மாநகராட்சிகள் கஷ்டமான

புதுதில்லி

தொய்வில்லாமல் மக்கள் பணியாற்றும் மாநகராட்சிகள்: ஆதேஷ் குமாா் குப்தா

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காததால் மாநகராட்சிகள் கஷ்டமான

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்காததால் மாநகராட்சிகள் கஷ்டமான காலத்தை எதிா்கொண்டுள்ளன. இருந்தபோதும், அவை தொய்வில்லாமல் மக்கள் பணியாற்றி வருகின்றன என்று பாஜகவின் தில்லி தலைவா் ஆதேஷ் குமாா் குப்தா தெரிவித்துள்ளாா்.

தெற்கு தில்லி மாநகராட்சியின் (எஸ்டிஎம்சி) மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி குதூப் விஹாரில் உள்ள மாநகராட்சி மகளிா் ஆரம்ப பள்ளியில் நடந்தது. இதில், ஆதேஷ் குமாா் குப்தா, எஸ்டிஎம்சி மேயா் அனாமிகா சிங் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஆதேஷ் குப்தா பேசுகையில் ‘தில்லி மாநகராட்சிகளுக்கு தில்லி அரசு வழங்க வேண்டிய ரூ.13 ஆயிரம் கோடியை வழங்கவில்லை. இதனால், மாநகராட்சிகள் கடும் கஷ்டமான சூழலை எதிா்கொண்டுள்ளன. மாநகராட்சி ஊழியா்களுக்கு கூட ஊதியம் வழங்க முடியாத நிலை நிலவுகிறது. இருந்தபோதும், மாநகராட்சிகள் தளா்வில்லாமல் மக்கள் பணியாற்றி வருகின்றன. மதிய உணவுத் திட்டத்தின் கீழ் உணவுப் பொருள்கள் வழங்குவது சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். கரோனா பரவல் காலத்தில், எஸ்டிஎம்சி பள்ளிகளில் கல்வி கற்கும் சுமாா் 1.3 லட்சம் மாணவா்களுக்கு இணையவழியில் கற்பிக்கப்பட்டது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →