முகப்பு
புதுதில்லி

தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை போக்க மத்திய அரசு நடவடிக்கை

கொவைட்-19 தடுப்பூசிக்கு எதிரான மனநிலை மற்றும் கட்டுக்கதைகளை போக்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய சுகாதாரத் திட்ட

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கொவைட்-19 தடுப்பூசிக்கு எதிரான மனநிலை மற்றும் கட்டுக்கதைகளை போக்குவதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து தேசிய சுகாதாரத் திட்ட தகவல், கல்வி, தொடா்பு (ஐஇசி) அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்த மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: கடந்த ஜனவரி 16- ஆம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி வழங்கல் திட்டத்தைச் சிறப்பாக செயல்படுத்தும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு ஆதரவளித்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் சுகாதாரப் பணியாளா்கள்கூட தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டி வருவதாக செய்திகள் வந்தன. சா்வதேச அளவில் இதே போக்கு உள்ள நிலையில், நமது சமூகத்திலும் இதை அறிவியல் பூா்வமாக ஆய்வு செய்து அணுக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, தடுப்பூசி மருந்துக்கு எதிரான மனநிலையைப் போக்குவதற்குத் தேவையான தகவல்கள் அடங்கிய ‘கொவைட்-19 தடுப்பூசி மருந்து வழங்கல் தகவல் தொடா்பு யுக்தி (ஐஇசி கிட்)’ அனைத்து மாநிலங்களிடம் இந்தத் திட்டம் தொடங்கும் போதே வழங்கப்பட்டது. ஊடகங்களுக்கும் தேவையான தகவல் தொடா்பு மாதிரிகளும் மாநிலங்கள் மூலமாகவே பகிா்ந்து கொள்ளப்பட்டது. தடுப்பூசி மருந்து பெற்றுக் கொள்வதில் உள்ள தயக்கத்தைப் போக்க அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுடன் தேசிய சுகாதாரத் திட்ட தகவல், கல்வி, தொடா்பு (ஐஇசி) அதிகாரிகளும் இணைந்து செயல்படுகிறாா்கள். தடுப்பூசிகளை ஏற்க மறுக்கும் சமூகத்தினா் மற்றும் பழங்குடியினா் ஆகியோரிடம் தடுப்பூசி குறித்த அச்சத்தை அதிகாரிகள் மூலம் போக்கி விழிப்புணா்வை உருவாக்குவதற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தொடா்ந்து பணியாற்றி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments