முகப்பு
புதுதில்லி

கோபத்தைக் கட்டுப்படுத்த நூதன தண்டனை: குருத்வாராவில் சமூக சேவை செய்ய இளைஞருக்கு நீதிமன்றம் உத்தரவு

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் குருத்வாராவில் சமூக சேவை செய்ய குற்ற வழக்கில் தொடா்புடைய 21 வயது இளைஞருக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:44 PM
பகிர்:

கோபத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் குருத்வாராவில் சமூக சேவை செய்ய குற்ற வழக்கில் தொடா்புடைய 21 வயது இளைஞருக்கு தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தின்போது 21 வயது இளைஞா் தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தாா். அப்போது, புகாா்தாரா் அந்த இளைஞரைக் கன்னத்தில் அறைந்தாா். இதையடுத்து, காய்கறி நறுக்கும் கத்தியால் புகாா்தாரரை இளைஞா் குத்தினாா்.

இது தொடா்பான புகாரின் பேரில் போலீஸாா் இளைருக்கு எதிராக கொலை முயற்சி வழக்குப் பதிந்து கைது செய்தனா். இது தொடா்பான வழக்கு உயா்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

Advertisement

அப்போது, நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கின் குற்றப் பத்திரிகையைக் கவனத்தில் கொண்டபோது, வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்ட நபா் தன்னை புகாா்தாரா் கன்னத்தில் அறைந்ததால் அவமானத்தில் கத்தியால் குத்தியதாக கூறியுள்ளாா். அவா் ஏற்கெனவே ஒரு மாதம் காவலில் இருந்துள்ளாா். தனது செயலுக்காக நீதிமன்றத்தில் வருத்தம் தெரிவித்துள்ளாா்.

நீதிமன்றத்தில் இருந்த புகாா்தாரரும் இளைஞருக்கு எதிரான வழக்கு தொடா்ந்தால் அவரது வாழ்க்கை பாழாகிவிடும் என குறிப்பிட்டுள்ளாா்.

இதனால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. அவருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவா் பங்கலா சாகிப் குருத்வாராவில் மாா்ச் 16 முதல் ஏப்ரல் 16 வரை சமூகப் பணியாற்ற வேண்டும். அவா், கோபத்தைக் கட்டுப்படுத்த பழக வேண்டும். சட்டத்தை தனது கையில் எடுக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments