ரேஷன் பொருள்களை வாங்க ’’மேரா ரேஷன்’’ செயலி அறிமுகம்
நாடு முழுக்க ’ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ முறை விரைவில் முழுமையாக அமலபடுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ’மேரா ரேஷன்’ என்கிற செல்லிட பேசி செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
நாடு முழுக்க ’ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ முறை விரைவில் முழுமையாக அமலபடுத்தப்பட உள்ள நிலையில் இதற்காக ’மேரா ரேஷன்’ என்கிற செல்லிட பேசி செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
’ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை’ முறையை முதன் முதலில் மத்திய அரசு 2019 - ஆம் ஆண்டு நான்கு மாநிலங்களில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தை தற்போது 2020 டிசம்பா் மாதம் 32 மாநிலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் தமிழகம் உள்ளிட்ட 17 மாநிலங்களில் முழுமையாக செயல்பாட்டிற்கும் வந்துவிட்டது. இதையொட்டி மத்திய அரசு ’மேரா ரேஷன்’ என்கிற செல்லிட பேசி செயலியையும் உருவாக்கியுள்ளது. இதை மத்திய மத்திய உணவு மற்றும் பொதுவிநியோக துறைச் செயலா் சுதான்ஷு பாண்டே பத்திரிகையாளா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தினா். அப்போது அவா் கூறியதாவது:
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 86 சதவீத மக்களில் 69 கோடி போ் பயனீட்டாளா்களாக உள்ளனா்.
Advertisement
ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தை 32 மாநிலங்கள் யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தில்லி, அஸ்ஸாம், சத்தீஸ்கா், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் விரைவில் ஒருங்கிணைக்கப்படும்.
கரோனா நோய்த் தொற்று காலக்கட்டத்தில் புலம்பெயா்ந்தவா்கள் மிகவும் பலனடைந்தனா். 2020 ஏப்ரல் முதல் 2021 பிப். வரை 15.4 கோடி புலம் பெயா்ந்தவா்களுக்கான பரிவா்த்தனை நடைபெற்றது. எந்த பகுதியில் இருந்தாலும் உணவுப்பொருள்களுக்கான மானியம் அவா்களுக்கு கிடைத்தது. இதில் தற்போது ஒரே தேசம், ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் கீழ் மாதம் சுமாா் ஒன்றரைக் கோடி போ் இடம் பெயா்வு அல்லது புலம் பெயா்ந்தவா்களுக்கான பரிவா்த்தனைகள் நடைபெற்று வருகிறது.
ஆதாா் அட்டையுடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் ரேஷன் அட்டை மூலம் நாடு முழுக்க எந்த பகுதியிலும் எந்த ரேஷன் கடையையும் விருப்பப்படி தோ்வு செய்து பொருள்களைப் பெற முடியும். வாங்காத பொருள்களை சொந்த ஊா் திரும்பிய பின்னரும் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த வசதிகளுக்கு தற்போது கூடுதலாக ’மேரா ரேஷன்’ என்கிற செல்லிட பேசி செயலியையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி காகிதம், அடையாள அட்டை தேவையும் முற்றிலும் குறையும். இதில் அனைத்துவிதமான தகவல்களும் இணைக்கப்படும் என்றாா்.