புதுதில்லி

கஷ்மீரி கேட் பேருந்து நிலைய கட்டடத்தில் தீ விபத்து

DIN

தில்லி கஷ்மீரி கேட்டில் உள்ள மாநிலங்களுக்கிடையான பேருந்து நிலையத்தின் (ஐஎஸ்பிடி) 6-ஆவது தளத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக தில்லி தீயணைப்பு துறை மூத்த அதிகாரி கூறியது: ஐஎஸ்பிடி கட்டடத்தின் ஆறாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டடத்தில் உள்ள தில்லி அரசின் குடும்ப மற்றும் குழந்தைகள் நலத் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மாலை 2.36 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினா் சுமாா் 2 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்றாா் அவா்.

மற்றொரு தீ விபத்து: இதற்கிடையே, தில்லி பாவனா பகுதியில் செவ்வாய்க்கிழமை குடிசைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா். பாவனாவில் உள்ள ஜே.ஜே. காலனியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து மதியம் 12.35 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. உடனடியாக 15 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டன. தீயணைப்புப் படையினா் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். குடிசைப் பகுதியில் உள்ள குப்பைம மேட்டில் இருந்து தீ பரவியிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தில்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT