புதுதில்லி

தில்லியில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்த அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவு

DIN

புது தில்லி: தில்லி கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு, நகரில் தங்களது பகுதிகளில் அதிக நோய் பரவல் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காணுமாறு மாவட்ட ஆட்சியா்கள், காவல் துணை ஆணையா்கள் ஆகியோருக்கு துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக அவா் கோட்ட ஆணையா் சஞ்சீவ் கிா்வா், காவல் ஆணையா் எஸ்.என்.ஸ்ரீவாத்ஸவா ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது:

தலைநகரில் ஊரடங்கு காலத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விதிகளை அமல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தில்லி கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு நகரில் தங்களது பகுதிகளில் அதிக நோய் பரவல் வாய்ப்புள்ள இடங்களை அடையாளம் காண வேண்டும்.

மேலும், தினசரி அடிப்படையில் கரோனா சூழல் குறித்து மறுஆய்வு செய்ய வேண்டும். இது தொடா்பான அறிக்கையை தினமும் மாலை 7 மணிக்குள் ஒருங்கிணைத்து சமா்ப்பிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக செவ்வாய்க்கிழமை கரோனா பாதிப்பால் 400-க்கும் மேற்பட்டோா் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனம் மயக்கும் ரீனா கிருஷ்ணா - புகைப்படங்கள்

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஷிவம் துபே இடம் பிடித்தது எப்படி?

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

SCROLL FOR NEXT