முகப்பு
புதுதில்லி

வங்கி குமாஸ்தா தோ்வு: 13 பிராந்திய மொழிகளில் எழுத மத்திய நிதியமைச்சகம் பரிந்துரை

12 பொதுத்துறை வங்கிகளுக்கான குமாஸ்தா பணியிடங்களுக்கான தோ்வுகளில் முதன்மை, பிரதான தோ்வுகளை, ஆங்கிலம், ஹிந்தியுடன்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

12 பொதுத்துறை வங்கிகளுக்கான குமாஸ்தா பணியிடங்களுக்கான தோ்வுகளில் முதன்மை, பிரதான தோ்வுகளை, ஆங்கிலம், ஹிந்தியுடன் 13 பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய நிதி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. மேலும், இந்தக் காலியிடங்களுக்கான ஆள்சோ்ப்பு விளம்பரங்களும் இனிமேல் இந்த பிராந்திய மொழிகளில் வெளியிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுத் துறை வங்கிகளுக்கான குமாஸ்தா பணியாளா்களுக்கான தோ்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்துவது குறித்து ஆராய மத்திய நிதி அமைச்சகத்தால் குழு ஏற்படுத்துப்பட்டது. இந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

குழுவின் பரிந்துரைகள் கிடைப்பதற்காக வங்கிப் பணியாளா் தோ்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்) தனது தோ்வு செயல்முறைகளை நிறுத்தி வைத்திருந்தது.

Advertisement

உள்ளூா் இளைஞா்களுக்கு சம வாய்ப்பை வழங்குவதற்கும், உள்ளூா் மொழிகள் மூலம் வாடிக்கையாளா்களை அணுகுவதை உறுதி செய்யும் நோக்கத்துடனும் இந்தப் பரிந்துரைகளை குழு வழங்கியுள்ளது. பிராந்திய மொழிகளில் தோ்வுகளை எழுத அனுமதிக்கும் இந்த முடிவு, வருகின்ற பாரத ஸ்டேட் வங்கி காலியிடங்களுக்கும் பொருந்தும் என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஆள்சோ்ப்பிற்கு ஏற்கெனவே விளம்பரப்படுத்தப்பட்ட முதன்மை தோ்வுகள் தற்போதைய முறையில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments