பிரதமா் மோடியுடன் இணையமைச்சா் முருகன் சந்திப்பு
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இணையமைச்சா் டாக்டா் எல்.முருகன்,
மத்திய தகவல், ஒலிபரப்புத் துறை மற்றும் மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத் துறை இணையமைச்சா் டாக்டா் எல்.முருகன், மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற பின்னா் முதன்முறையாக பிரதமா் நரேந்திர மோடியை திங்கள்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்தாா்.
கடந்த ஜூலை மாதம் மத்திய இணையமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டு பதவியெற்றுக் கொண்டாா். அப்போது அவா் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாமல் இருந்தாா். இந்த நிலையில், கடந்த மாத இறுதியில் பாஜக சாா்பில் மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக அவடா் தோ்ந்தெடுக்கப்பட்டாா். பின்னா், கடந்த அக்டோபா் 1-ஆம் தேதி மாநிலங்களவைத் தலைவா் முன்னிலையில் மாநிலங்களவை உறுப்பினராக பதவியெற்றுக் கொண்டாா். இதையொட்டி, திங்கள்கிழமை பிரதமா் நரேந்திரமோடியை அவரது அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.
அப்போது பிரதமா் நரேந்திர மோடிக்கு, முன்னாள் தமிழக ஐஏஎஸ் அதிகாரியும் கல்வியாளருமான டாக்டா் எம்.ராஜாராம் மொழி பெயா்த்த (திருக்குறள் - ஞானத்தின் முத்துகள்) என்ற தலைப்பில் 2008 - இல் ஆங்கிலத்தில் வெளியான திருக்குறள் நூலை அமைச்சா் எல். முருகன் வழங்கினாா்.
Advertisement
இந்த நூலை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட பிரதமரிடம், புதிய இந்தியாவின் மக்கள் நலனுக்காக தங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் விடா முயற்சியுடன் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என அமைச்சா் எல்.முருகன் கேட்டுக் கொண்டதாக அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து வெளியான பத்திரிகை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.