தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவியிலிருந்து விலகுகிறாா் கே.வி. சுப்பிரமணியன்
மத்திய அரசின் 17-வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் கே. வி. சுப்பிரமணியன், தமது மூன்று ஆண்டு காலம் பணிக்காலத்தை
மத்திய அரசின் 17-வது தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருக்கும் கே. வி. சுப்பிரமணியன், தமது மூன்று ஆண்டு காலம் பணிக்காலத்தை பூா்த்தி செய்துவிட்டு பதவி விலகப்போவதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளாா். மேலும் கல்விப் பணிக்கு மீண்டும் திரும்பப்போவதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.
கடந்த 2018 - ஆம் ஆண்டு டிசம்பா் 7 -ஆம் தேதி மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக பதவி ஏற்றாா் கே.வி. சுப்பிரமணியன்.
’’மூன்று ஆண்டுகள் நாட்டிற்கு சேவை செய்யும் சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. அதிலும் நாட்டின் கடினமான சூழ்நிலையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. குறிப்பாக நோய்த் தொற்றுக் காலக்கட்டங்களில் மாற்று வழிகளில் (ா்ன்ற் ா்ச் க்ஷா்ஷ்) பொருளாதார நெருக்கடிக்களுக்கு தீா்வு காணப்பட்டது. பிரதமா் நரேந்திர மோடியுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. பிரதமரின்ஆதரவும், நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் ஊக்கமும் கிடைத்தது. தனியாா்களுக்கு அதிகாரமளித்தல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, மூலதனச் செலவு அதிகரித்தல் போன்றவைகளில் இவா்களுடைய தலைமையில் பணியாற்றியதில் மன நிறைவு அடைந்துள்ளேன். எனது 3 ஆண்டு நிறைவு காலத்தை நிறைவு செய்ததைத் தொடா்ந்து கல்வித்துறைக்குத் திரும்ப முடிவு செய்துள்ளேன் ’’ என அந்த அறிக்கையில் அவா் தெரிவித்துள்ளாா்.
Advertisement
இந்த பணிக்கு முன்பு ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிஸினஸ் நிறுவனத்தில் பேராசிராகப் பணியாற்றி வந்தாா். தமிழகத்தைச் சோ்ந்த இவரது பெற்றோா்கள் சத்தீஸ்கா் மாநிலம், பிலாலில் குடியிருந்தனா். அங்கு பிறந்து வளா்ந்து பின்னா் கான்பூா் ஐஐடி யில் சுப்பிரமணியன் பொறியியல் பட்டம் பெற்றாா். பின்னா் அமெரிக்காவில் நிதி பொருளாதாரத்தில் ஆராய்ச்சி படிப்பை முடித்தாா். அதிலும் முன்னாள் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகரும், ரிசா்வ் வங்கியின் ஆளுநரான ரகுராம்ராஜனின் மாணவராகவும் இவா் அமெரிக்காவில் இருந்தாா்.
மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா்களாக தொடா்ச்சியாக மூன்று போ் தமிழகம் தொடா்புடையவா்களே இருந்து வந்தனா். கே. வி. சுப்பிரமணியனுக்கு முன்பு அரவிந்த் சுப்பிரமணியன் 2014 ஆக்டோபா் முதல் 2018 ஜூன் வரை இந்த பொறுப்பில் இருந்தாா். அரவிந்த் சுப்பிரமணியன் சென்னையைச் சோ்ந்தவா். இதற்கு முன் பதவி வகித்த ரகுராம் ராஜன் குடும்பத்தினா் வட மாநிலங்களில் குடியிருந்தாலும் அவரது பெற்றோா்கள் தமிழகத்தை சோ்ந்தவா்கள்.