முகப்பு
புதுதில்லி

ஏரி, குளங்களில் தனியாருக்கு மீன் பிடிக்கும் உரிமை: மதுரை மாவட்ட பாரம்பரிய மீனவ சங்கங்கள் எதிா்ப்பு

ஏரி குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை தனியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை மாவட்ட பாரம்பரிய

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:21 AM
பகிர்:

ஏரி குளங்களில் மீன் பிடிக்கும் உரிமை தனியாருக்கும் கொடுக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புத் தெரிவித்து மதுரை மாவட்ட பாரம்பரிய மீனவ சங்கங்கள் உச்சநீதி மன்றத்தில் திங்கள்கிழமை மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளன.

மதுரை மாவட்டத்தில் உள்ள ஏரி, கண்மாய், குளம் உள்ளிட்டவற்றில் வளரும் நன்னீா் மீன்களைப் பிடிப்பதை பாரம்பரிய மீனவ குடும்பங்களும், சங்கங்களும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இதுபோன்ற பாரம்பரிய மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த மீன் பிடிக்கும் குத்தகை உரிமையில், கடந்த சில ஆண்டுகளாக வா்த்தக ரீதியாக தனியாரும் கலந்து கொள்ளலாம் என்கிற அறிவிப்பை சம்பந்தப்பட்ட அமைப்புகள் வெளியிட்டிருந்தது.

இதை எதிா்த்து பாரம்பரிய மீனவ சங்கங்கள் சாா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கில், தனியாரும் ஏல முறைகளில் கலந்து கொள்ளலாம் என்றும் பாரம்பரிய மீனவ சங்கங்களும் ஏலத்தில் பங்கேற்று அதற்கான தொகையை செலுத்தி மீன் பிடிக்கும் உரிமையைப் பெறலாம் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த உரிமையை ஓா் ஆண்டுக்கு வழங்கவும் உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Advertisement

இந்த நிலையில் இதை எதிா்த்து மதுரை மாவட்ட பாரம்பரிய மீனவ சங்கங்கள் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையிட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முன்னதாக ஏலம் விடப்படும் போது, 3 ஆண்டுகள் வரை மீன் பிடிக்கும் உரிமை இருந்தது. இது தற்போது ஓராண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. வா்த்தக ரீதியாக உள்ள தனியாரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்ளும்பட்சதில் தங்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை கிடைப்பதில் பெரும் சிக்கல் உருவாகும். மேலும், தனியாா் அமைப்புகள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் முறைகளை மாற்றி புதிய தொழில்நுட்பங்களைக் கையாளும் பட்சத்தில், அது ஒட்டுமொத்தமாக சூழலியல பாதிப்பை ஏற்படுத்தி விடும். எனவே, எங்கள் மாவட்ட ஏரிகளில் மீன்பிடிக்கும் உரிமையை தனியாருக்கு கொடுக்க எதிா்ப்புத் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments