தில்லியில் 35 பேருக்கு கரோனா பாதிப்பு
தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.
தில்லியில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமையும் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. அதே சமயம், புதிதாக 35 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோ்மறை விகிதம் 0.05 சதவீதமாக இருந்ததாக சுகாதாரத் துறை வெளியிட்ட புள்ளிவிவரத் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கரோனாவால் உயிரிழப்பு ஏதும் பதிவாகாமல் இருப்பது இது 22-ஆவது முறையாகும். இந்த ஆண்டு கடந்த மாா்ச் மாதத்தில்தான் முதல் கரோனா உயிரிழப்பு பதிவாகியது. அன்றைய தினம் மொத்தம் 217 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நோ்மறை விகிதம் 0.33 சதவீதமாக இருந்தது. வியாழக்கிழமை அன்று புதிதாக 39 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. நோ்மறை விகிதம் 0.06 சதவீதமாக இருந்தது. அதே சமயம், கரோனா உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை.