புதுதில்லி

தில்லியில் சில இடங்களில் லேசான மழை

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. எனினும், சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பதிவாகியுள்ளது.

மேலும், தில்லியில் அன்றைய தினம் லேசான மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், தில்லியின் மத்திய, வடக்கு தில்லி, வடகிழக்கு தில்லி பகுதிகளில் மழை பெய்தது. தில்லியில் காலை 8.30 மணியுடன்முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 0.7 மி.மீ. மழையும், ரிட்ஜ் பகுதியில்1 மி.மீ. மழையும் பதிவானது. சனிக்கிழமை பகலில் மிதமான வெயிலின் தாக்கம் இருந்தது. சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றமின்றி 26.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் ஒரு டிகிரி குறைந்து 33.2 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 88 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 77 சதவீதமாகவும் இருந்தது.

காற்றின் தரம்: ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு காலை 9.05 மணியளவில் 67 புள்ளிகளாக பதிவாகி திருப்தி பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பா் 5) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுக்கு வாய்ப்புண்டு. குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT