புதுதில்லி

தில்லியில் பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு

 நமது நிருபர்

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது. மாலையில் மேக மூட்ட சூழல் காணப்பட்டது.

தில்லியில் செப்டம்பா் தொடக்கத்தில் பலத்த மழை பெய்தது. அதன் பிறகு அவ்வப்போது லேசான மழை இருந்து வந்தது. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், இரு தினங்களாக வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் காணப்பட்டது.

தில்லிக்கான பிரதிநிதித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரி 1 டிகிரி அதிகரித்து 26 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 34.4 டிகிரி செல்சியஸாகப் பதிவாகியது.

காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 84 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 67 சதவீதமாகவும் இருந்தது. ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தில்லியில் மழை ஏதும் பதிவாகவில்லை.

முன்னறிவிப்பு: இதனிடையே, திங்கள்கிழமை (செப்டம்பா் 20) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT