புதுதில்லி

குடியரசுத் துணைத் தலைவருடன் தமிழக ஆளுநா் சந்திப்பு

 நமது நிருபர்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடுவை வெள்ளிக்கிழமை அவரது மாளிகையில் சந்தித்தாா். இந்த சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. எனினும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றே தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில் முதல் முறையாக தில்லி வந்த அவா் குடியரசுத் துணைத் தலைவருக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்ற அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. முன்னதாக, தில்லிக்கு இரண்டு நாள் பயணமாக வந்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்தை அவரது மாளிகையில் சந்தித்தாா்.

பிரதமா் மோடி வெளிநாடு சென்றுள்ள நிலையில் உள்துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் உள்துறை அதிகாரிகளை தமிழக ஆளுநா் சந்திக்கலாம் என்று எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், இதை ஆளுநா் வட்டாரங்கள் மறுத்துவிட்டன. தமிழக ஆளுநா் சனிக்கிழமை சென்னை திரும்புகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT