புதுதில்லி

மேலும் 126 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

தில்லியில் புதன்கிழமை புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் ஒருவா் உயிரிழந்தாா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 1.12 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பாதிப்புகளுடன் சோ்த்து தில்லியின் மொத்த கரோனா தொற்று பாதிப்பு 18,65,620-ஆக அதிகரித்துள்ளது. மொத்த இறப்பு எண்ணிக்கை 26,155-ஆகவே உள்ளது. தில்லியில் செவ்வாய்க்கிழமை 112 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 1.05 சதவீத நோ்மறை விகிதம் பதிவானது. அன்றைய தினம் மொத்தம் 11,241 கரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டன. நகரில் வீட்டுத் தனிமையில் இருப்போரின் எண்ணிக்கை 353-ஆக அதிகரித்தது. தில்லி மருத்துவமனைகளில் உள்ள 9,745 படுக்கைகளில் 39 (0.40 சதவீதம்) படுக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT