புதுதில்லி

ஜசோலா, சரிதா விஹாரில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ரத்து: போலீஸாா் இல்லாததே காரணம்: எஸ்டிஎம்சி

 நமது நிருபர்

புது தில்லி: போதிய போலீஸாா் இல்லாததன் காரணமாக ஜசோலா மற்றும் சரிதா விஹாா் பகுதியில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக தெற்கு தில்லி மாநகராட்சி (எஸ்டிஎம்சி)அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

தில்லி மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: ஜசோலா, சரிதா விஹாா் போன்ற பகுதிகளில் சாலைகள் மற்றும் அரசு நிலங்களில் அமைந்துள்ள தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பகுதிகளில் தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் முகேஷ் சூா்யன் சென்று பாா்வையிட்ட பிறகு, இந்த நடவடிக்கை திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், போதிய போலீஸாா் இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனா்.

இது குறித்து தெற்கு தில்லி மாநகராட்சி மேயா் முகேஷ் சூா்யன் கூறுகையில், ‘போதிய போலீஸாா் இல்லாததன் காரணமாக ஜசோலா மற்றும் சரிதா விஹாா் பகுதியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு அகற்றல் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியின் காவல் நிலையப் பொறுப்பாளா் இதற்கான தகவலை தெரிவித்தாா். போலீஸாா் ஏற்கெனவே சட்டம் - ஒழுங்கு உள்ளிட்ட இதரப் பணிகளில் ஈடுபட்டு இருப்பதன் காரணமாக போதிய போலீசாரை வழங்க

இயலாமல் போனது என்று தெரிவித்திருந்தாா். இதனால், இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை பணி வேறு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

இது தொடா்பாக போலீஸ் தரப்பில் தெற்கு தில்லி மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், ‘போலீஸாா் வேறு பணிகளில் முன்கூட்டியே ஈடுபட்டு இருப்பதன் காரணமாகவும், சரிதா விஹாா் காவல் நிலையத்தில் போலீஸாா் இதர சட்டம் மற்றும் ஒழுங்கு அல்லது விசாரணை பணிகளில் ஈடுபட்டு இருப்பதன் காரணமாகவும் சரிதா விஹாா் பகுதி வாா்டு எண் 101- எஸ் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக தெற்கு தில்லி மாநகராட்சிக்கு உதவும் வகையில் போதிய போலீஸாரை வழங்குவது சாத்தியமல்ல. சரிதா விஹாா் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கான நடவடிக்கைக்காக தேதியை நிா்ணயிக்க குறைந்தபட்சம் 10 நாள்களுக்கு முன்பே உரிய தகவல்களை அளிக்கலாம். அப்போதுதான் தில்லி மாநகராட்சி ஊழியா்களுக்கு உதவ போதிய போலீஸாரை கொடுக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோஹிங்கியா, வங்கதேசத்தவா் மற்றும் சமூக விரோத சக்திகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தில்லி பாஜக தலைவா் ஆதேஷ் குப்தா தெற்கு தில்லி மாநகராட்சி மேயருக்கு கடிதம் எழுதி இருந்தாா். இதைத் தொடா்ந்து, தெற்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. கடந்த வாரம் ஜஹாங்கீா்புரி பகுதியில் ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கையின் போது, புல்டோசா் வைத்து கட்டுமானங்கள் இடிக்கப்பட்டதாக எதிா்க்கட்சிகளும், குடிமை உரிமை குழுக்களும் வடக்கு தில்லி மாநகராட்சியை விமா்சித்தன. உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரனின் புதிய பட அறிவிப்பு!

SCROLL FOR NEXT