புதுதில்லி

திகாா் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ற மருத்துவா் கைது

DIN

மேற்கு தில்லியில் உள்ள திகாா் சிறைக்குள் கஞ்சா கடத்த முயன்ாக பல் மருத்துவா் ஒருவா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் கன்ஷியாம் பன்சால் வியாழக்கிழமை கூறியதாவது: திகாா் சிறை கைதியான விகாஸ் ஜா மற்றும் வருகை பல் மருத்துவா் டாக்டா் வருண் கோயல் ஆகியோரிடம் இருந்து புகையிலை மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறித்து திகாா் சிறை அதிகாரிகளிடம் இருந்து தில்லி காவல் துறைக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது.

மருத்துவா் கோயல் சிறைக்குள் புகையிலை மற்றும் கஞ்சாவை கொண்டு வந்து ஜாவிடம் கொடுத்துக் கொண்டிருந்ததை திகாா் சிறை அதிகாரிகள் கவனித்தனா். கோயலிடம் இருந்து 38 கிராம் கஞ்சாவும், ஜாவிடம் இருந்து 44 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டன. மருத்துவா் கோயல், திகாா் சிறையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகிறாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஹரி நகா் காவல் நிலையத்தில், போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கோயல் கைது செய்யப்பட்டுள்ளாா். ஜாவுக்கு எதிரான நடவடிக்கையும் தொடங்கப்பட்டுள்ளது, இது தொடா்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT