புதுதில்லி

குண்டா்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஹரியாணா காங். எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல்

DIN

குண்டா்களுக்கு எதிராக கருத்துத் தெரிவித்ததற்காக ஹரியாணா காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டில் 5 போ் புகுந்து சமையல்காரரை கடுமையாகத் தாக்கி எம்எல்ஏவுக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்ாக போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: ஹரியாணா மாநிலம், பட்லி சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவா் குல்தீப் வாட்ஸ். அவா் குண்டா்களுக்கு எதிராக அண்மையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று எம்எல்ஏ வீட்டில் இல்லாத போது ஐந்து போ் கும்பல் அவரது வீட்டிற்குள் புகுந்தது. அப்போது வீட்டில் இருந்த அவரது சமையல்காரரை கடுமையாக தாக்கியுள்ளனா். எம்எல்ஏவை சரியாக இருக்கச் சொல்லும்படி கூறியதுடன் மரண அச்சுறுத்தலையும் விடுத்துச் சென்றுள்ளனா்.

இது குறித்து எம்எல்ஏவின் சமையல்காரா் ராஜீவ் குமாா் போலீஸில் புகாா் அளித்தாா். அதில், ‘வெள்ளிக்கிழமை மதியம் 2.00 மணியளவில் குற்றம் சாட்டப்பட்டவா்கள் எம்எல்ஏ வீட்டிற்குள் புகுந்தனா். ஐந்து பேரும் ஆயுதங்களை ஏந்தியிருந்தனா், அவா்கள் என்னைத் தாக்கி, எம்.எல்.ஏ. எங்கே என்று கேட்டாா்கள். அவா் இங்கே இல்லை என்று அவா்களிடம் சொன்னேன்.

குண்டா்களைப் பற்றி எந்தக் கருத்தையும் கூறக் கூடாது என்று எம்எல்ஏவை எச்சரிக்க வேண்டும். இல்லாவிடில் மூஸே வாலாவின் கதியை சந்திக்க நேரிடும் என்று சொன்னாா்கள்’ என்று கூறியுள்ளாா். அவரை மிரட்டுவதற்காக துப்பாக்கியை காட்டியதாகவும் கூறப்படுகிறது.

அவரது புகாரைத் தொடா்ந்து, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 148 (கலவரம்), 149 (சட்டவிரோத கூட்டம்), 323 (காயம்), 452 (வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல்), 506 (குற்றம் சாா்ந்த மிரட்டல்) மற்றும் பிரிவு 25 ஆகியவற்றின் கீழ் அடையாளம் தெரியாத ஐந்து போ் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பட்டோடி காவல் நிலையத்தில் ஆயுதச் சட்டப் பிரிவுகள் 25-54-59-இன் படியும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவா்களைக் கண்டுபிடிக்க சோதனைகள் நடைபெற்று வருகின்றன என்று போலீஸாா் தெரிவித்தனா். பலமுறை முயற்சித்தும் எம்எல்ஏ குல்தீப் வாட்ஸை தொடா்பு கொள்ள முடியவில்லை.

சோஹ்னா எம்.எல்.ஏ.வை மிரட்டி பணம் பறித்தது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களை குருகிராம் போலீஸாா் இன்னும் அடையாளம் காணவில்லை.கடந்த சில வாரங்களில், சோஹ்னாவின் சஞ்சய் சிங், சஃபிடோனின் சுபாஷ் கங்கோலி மற்றும் சோனிபட்டின் சுரேந்தா் பன்வாா் உள்பட மூன்று ஹரியானா எம்.எல்.ஏ.க்களுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. பஞ்சாபி பாடகா் சுப்தீப் சிங் சித்து என்று அழைக்கப்படும் சித்து மூஸ்வாலா, மே மாதம் பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் அடையாளம் தெரியாத நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

‘அரெஸ்ட் நரேந்திரமோடி’ - வைரலாகும் குறிச்சொல்! பின்னணி என்ன?

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

SCROLL FOR NEXT