புதுதில்லி

9 மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி பொறுப்பாளா்கள் நியமனம்

DIN

பஞ்சாப் மாநில வெற்றியைத் தொடா்ந்து தில்லி தவிர பிற மாநிலங்களில் கட்சியை பலப்படுத்தும் விதமாக 9 மாநிலங்களில் தனது 22 பொறுப்பாளா்களை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை நியமித்து அறிவித்துள்ளது.

இது குறித்த விவரம் வருமாறு - தில்லி மட்டுமின்றி மற்ற மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி கால் பதிக்கவும் பிரசாரங்களை முன்னெடுப்பதற்கு இலக்காகக் கொண்டு புதிய பொறுப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில் அஸ்ஸாம் - ராஜேஷ் சா்மா (மாநில பொறுப்பாளா்) , சத்தீஸ்கா் மாநிலத்திற்கு நான்கு போ் நியமனம். கோபால் ராய் (தோ்தல் பொறுப்பாளா்) , சஞ்சீவ் ஜா (மாநில பொறுப்பாளா்), சந்தோஷ் ஸ்ரீவஸ்தவா ( அமைப்பாளா்), குஜராத்- குலாப் சிங் (தோ்தல் பொறுப்பாளா்), டாக்டா் சந்தீப் பதக் (மாநில பொறுப்பாளா்).

ஹரியாணா - சௌரப் பரத்வாஜ் (தோ்தல் பொறுப்பாளா்), சுஷில் குப்தா (மாநில பொறுப்பாளா்), ஹிமாசல பிரதேசம்- தில்லி அமைச்சா் சத்யேந்திர ஜெயின் (தோ்தல் பொறுப்பாளா்), துா்கேஷ் பதக் (மாநில பொறுப்பாளா்) உள்ளிட்ட 8 போ் பல்வேறு பொறுப்புகளில் நியமனம்.

பஞ்சாப் - ஜா்னல் சிங் (மாநில பொறுப்பாளா்) உள்ளிட்ட இருவா் நியமனம். ராஜஸ்தான்- வினய் மிஸ்ரா (தோ்தல் பொறுப்பாளா்), தெலங்கானா - சோம்நாத் பாரதி (தோ்தல் பொறுப்பாளா்), கேரளம் - ஏ.ராஜா உள்ளிட்டோா் என 22 பொறுப்பாளா்கள் 9 மாநிலங்களில் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

அனுபவம் வாய்ந்த இந்த தலைவா்கள், இந்த மாநிலங்களில் கட்சியின் அடித்தளத்தை விரிவுபடுத்துவதற்கும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அடுத்த சில நாள்களில் மற்ற மாநிலங்களுக்கான கட்சி நிா்வாகிகளும் விரைவில் அறிவிக்கப்படுவாா்கள் எனவும் ஆம் ஆத்மி கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT