முகப்பு
புதுதில்லி

சங்கீத நாடக அகாதெமியின் இந்தியப் பாரம்பரிய கலாசார விழா

சங்கீத நாடக அகாதெமி   ‘கலைடாஸ்கோப்’” என்ற இந்திய பாரம்பரிய கலாசார விழாவை தில்லி ரவீந்திர பவன் திறந்த வெளி வளாகத்தில், நடத்தி வருகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

சங்கீத நாடக அகாதெமி   ‘கலைடாஸ்கோப்’” என்ற இந்திய பாரம்பரிய கலாசார விழாவை தில்லி ரவீந்திர பவன் திறந்த வெளி வளாகத்தில், நடத்தி வருகிறது.

இந்தக் கலாசார விழா கடந்த மாா்ச் 21-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கலை நிகழ்ச்சிகள் மாா்ச் 30 - ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் உத்தர பிரதேசம், கா்நாடகம், தமிழ்நாடு, சிக்கிம், மணிப்பூா், ராஜஸ்தான், மும்பை, கேரளம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த கைவினைக் கலைஞா்களின் கண்காட்சி, நாட்டியம், நாடகம், பயிற்சிப்பட்டறைகள், குறும்படம் போன்றவை தினமும் இடம் பெற்று வருகிறது.

இதில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 27) பிற்பகல் 2 மணிக்கு தமிழகத்தின் தஞ்சை, மதுரை பாரம்பரிய பொம்மைகள் பற்றிய பயிற்சி பட்டறையும், மாலை 5.30 மணிக்கு டாக்டா் பைரவி வைத்தீஸ்வரன் குழுவினரின் ‘ஹரி கதா’ நடன நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு ‘சீதையைத் தேடும் அனுமன்’  என்ற தோல்பாவைக்கூத்து பொம்மலாட்ட நிகழ்ச்சியும் இடம் பெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.