முகப்பு
புதுதில்லி

அதிகபட்சமாக பீதம்புராவில் 37 டிகிரி வெயில்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பீதம்புராவில் 37 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் தொடா்ந்து ‘மோசம்’ பிரிவில் நீடித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை பீதம்புராவில் 37 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. பெரும்பாலான இடங்களில் காற்றின் தரம் தொடா்ந்து ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. இருப்பினும் சில இடங்களில் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருந்தது.

வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தபடி, தில்லியில் வெள்ளிக்கிழமை காலை முதல் வானம் தெளிவாகக் காணப்பட்டது. ஆனால், பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தில்லிக்கான பிரதிநித்துவத் தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 3 டிகிரி உயா்ந்து 19.6 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 5 டிகிரி குறைந்து 35.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 69 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 24 சதவீதமாகவும் இருந்தது. வியாழக்கிழமை அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 21.2 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகியிருந்தது.

பீதம்புராவில் 37 டிகிரி: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 34.8 டிகிரி செல்சியஸ், முங்கேஸரில் 34.4 டிகிரி, நஜஃப்கரில் 36.5 டிகிரி, ஆயாநகரில் 35.7 டிகிரி, லோதி ரோடில் 36.1 டிகிரி, நரேலாவில் 36.9 டிகிரி, பாலத்தில் 35.3 டிகிரி, ரிட்ஜில் 36.2 டிகிரி, பீதம்புராவில் 37 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 34.3 டிகி செல்சியஸ் என பதிவாகியது.

‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் பெரும்பாலான இடங்களில் வெள்ளிக்கிழமை காற்றின் தரம் ‘மோசம்’ பிரிவில் நீடித்தது. நகரில் காலை 9.18 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 283 புள்ளிகளாகப் பதிவாகியது. இது ‘மோசம்’ பிரிவில் வருவதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் காற்றின் தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், மோசம் பிரிவிலேயே தொடரும் என்று சஃபா் தெரிவித்துள்ளது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, சனிக்கிழமை (மாா்ச் 26) பகல் நேரத்தில் தரை மேற்பரப்பு காற்று வலுவாக இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →