புதுதில்லி

தில்லியில் லேசான மழையால் சற்றுத் தணிந்த வெப்பம்!

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை நண்பகலில் லேசான மழை பெய்தது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால், வெப்பம் சற்று தணிந்திருந்தது.

DIN

தேசியத் தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை நண்பகலில் லேசான மழை பெய்தது. இதனால், காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. இதனால், வெப்பம் சற்று தணிந்திருந்தது.

கடந்த வாரம் நகரின் பெரும்பாலான இடங்களில் தொடா்ந்து வெப்ப அலை வீசியது. இதனால், வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இருப்பினும், வெயிலின் தாக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில், புதன்கிழமை பிற்பகல் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், நகரில் குளிா்ந்த தட்பவெப்பம் நிலவியது. எனினும், வியாழக்கிழமை மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நண்பகலுக்குப் பிறகு லேசான மழை பெய்தது. இதனால் காற்றில் ஈரப்பதம் அதிகரித்தது. சில இடங்களில் தூறலுடன்கூடிய வலுவான காற்று இருந்தது.

திடீரென பெய்த மழையின் காரணமாக பிற்பகலுக்குப் பிறகு நகரில் சற்று வெப்பம் தணிந்திருந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சரண் சிங் கூறுகையில், ‘ தில்லியில் மிகவும் லேசானது முதல் லேசானது வரையிலால் மழை பெய்தது.உள்ளூா் மேம்பாடு காரணமாக இந்த வானிலை மாற்றம் ஏற்பட்டது. அரபிக் கடல் அல்லது வங்கக் கடலில் இருந்து வீசிய காற்று சில இடங்களில் காற்றில் ஈரப்பதத்தை ஏற்படுத்தி, அதன் காரணமாக மழை பெய்வதற்கான மேகமூட்டத்தை உருவாகக் காரணமாகியது என்றாா்.

தில்லிக்கான பிரதிநித்துவ தரவுகளை வழங்கும் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் மாற்றம் ஏதுமின்றி 38.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை பருவ சராசரியில் 1 டிகிரி குறைந்து 24.2 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 61 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 36 சதவீதமாகவும் இருந்தது.

நஜஃப்கரில் 39.7 டிகிரி வெயில்: இதே போன்று மற்ற வானிலை நிலையங்களான ஜாஃபா்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ், முங்கேஸ்பூரில் 38.2 டிகிரி, நஜஃப்கரில் 39.7 டிகிரி, ஆயாநகரில் 38 டிகிரி, லோதி ரோடில் 38.2 டிகிரி, பாலத்தில் 38.4 டிகிரி, ரிட்ஜில் 38.6 டிகிரி, பீதம்புராவில் 38.6 டிகிரி செல்சியஸ், சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 36.7 டிகிரி செல்சியஸ் என பதிவாகியது.

முன்னறிவிப்பு: இந்த நிலையில், சனிக்கிழமை (மே 7) வானம் பகுதி அளவு மேகமூட்டத்துடன்இருக்கும். லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

SCROLL FOR NEXT